இராமநாதபுரம்உலகம்

துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் புனித ஹஜ் பயணம் முடித்து திரும்பிய நிர்வாகிக்கு வரவேற்பு

துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் புனித ஹஜ் பயணம் முடித்து திரும்பிய நிர்வாகிக்கு வரவேற்பு

துபாய் :

துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் கௌரவ தலைவர் ஏ. ஜஹாங்கீர் புனித ஹஜ் பயணம் முடித்து திரும்பியதையடுத்து வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு ஜமாஅத் தலைவர் சுல்தான் செய்யது இப்ராஹிம் தலைமை வகித்தார்.

பொதுச் செயலாளர் காதர் அஸ்லம் வரவேற்புரை நிகழ்த்தினார்.

முன்னாள் பொதுச் செயலாளர் முதுவை ஹிதாயத் தலைமையில் புனித ஹஜ் பயணம் முடித்து திரும்பிய ஏ. ஜஹாங்கீருக்கு பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டது.

விழாவில் உத்தமபாளையம் பிரமுகர்கள் செய்யது இப்ராஹிம், முஹம்மது பிச்சை, பிளசண்ட் டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் நிறுவனத்தின் மாஜிதா, காரைக்கால் வானொலியின் முன்னாள் வானொலி தொகுப்பாளர் நூர் ஃபாத்திமா உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

விழாவில் மீரான், கே.பி.எஸ். அமீன், ஏ. ஃபக்ருதீன் அலி அஹ்மது, ஹபிப் திவான், க்யூ.ரியாஸ், ஏ.கே.எஸ். பாட்சா, எஸ். இத்ரீஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் குடும்பத்துடன் பங்கேற்றனர்.

பொருளாளர் அஹமது அனஸ் நன்றியுரை நிகழ்த்தினார்.  

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button