கவிதைகள் (All)

ஒப்பனை மிருகங்கள்…

ஒப்பனை மிருகங்கள்…
××××××××××××××××××××××××
அழகு முகம் காட்டி
அழுக்கு மனம் படைத்து…
இழுக்காய் வாழும்
இன்றைய மாந்தர்கள்
ஒப்பனை மிருகங்கள்.

காகிதக்கப்பலில்
கரை சேர்ந்து விடலாம் என்று
கண்கட்டி வித்தை
காட்டும் கயவர்கள்
ஒப்பனை மிருகங்கள்.

நஞ்சு புதைத்து
நட்பாய் நடித்து
நம்ப வைக்கும்
வேடதாரிகள்
ஒப்பனை மிருகங்கள்.

நிழலாய் வந்து
நித்திரையை கெடுக்கும்
அகத்தில் அழுக்கு படிந்த
அங்கம் கொண்ட
அர்த்தமற்ற மனிதர்கள்
ஒப்பனை மிருகங்கள்.

தேன் தடவிய
வார்த்தைகளால்
தேகத்தில் நஞ்சை ஏற்றும்
தேசத்தின் துரோகிகள்
ஒப்பனை மிருகங்கள்.

உண்மையை மறைத்து
பொய்யால் வாழும்
நம்பிக்கையற்ற
நண்பர்களும்
ஒப்பனை மிருகங்களே…

உறவுகளின் போர்வையில்
உள்ளத்தில் வஞ்சமும்
முகத்தில் சிரிப்பை காட்டி
அகத்தில் வெறுப்பை
விதைக்கும் விரோதிகளும்
ஒப்பனை மிருகங்களே.

ஒப்பனை இல்லா
இயற்கை அழகு…
கற்பனையில்லா
வாழ்க்கை அழகு.

அரும்புக்கவி
அன்வர் உசேன்.
அஜந்தா டெக்ஸ்டைல்ஸ்
ராமநாதபுரம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button