தமிழ்நாடு
போதைப்பொருள் பயன்படுத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி

போதைப்பொருள் பயன்படுத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி

தமிழக அரசின் வழிகாட்டலின் படி, கல்லூரி போதைப்பொருள்பயன்படுத்தல் எதிர்ப்பு கழகம் சார்பாக 24.01.2026 அன்று போதைப்பொருள் பயன்படுத்தல் எதிர்ப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி போதைப்பொருள் எதிர்ப்பு கழக இணைஒருங்கிணைப்பாளர் முனைவர் S. நாசர் வரவேற்று தலைமையுரையாற்றினார். உதவிப்பேராசிரியர்கள் முனைவர் S. நசீர் கான் மற்றும் முனைவர் S.A. சம்சுதீன் இப்ராஹிம் ஆகியோர் போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் உடல்ரீதியான மற்றும் மனரீதியான பாதிப்புகள் குறித்தும் பேசினர். இறுதியாக இறுதியாண்டு வணிகவியல் மாணவர் திரு. மோகன்ராம் நன்றி கூறினார்.




