300க்கும் மேற்பட்ட நூல்கள் அன்பளிப்பு

300க்கும் மேற்பட்ட நூல்கள் அன்பளிப்பு

குவைத், ஹவல்லி அல் ஜீர் பள்ளிவாசலில் *குவைத் ஸல்ஸபீல் தொண்டு நிறுவனம்* ஏற்படுத்தியிருக்கும் பன்மொழி நூலகத்திற்கு குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் *நூல் கொடை இயக்கம்* மூலமாக உலகின் மூத்த மொழியும், முதன்மை மொழியுமான தமிழ் மொழியில் 300க்கும் மேற்பட்ட நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
குவைத் இஸ்லாமிய சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் வழங்கிய திருக்குர்ஆன் மொழியாக்கம் (தர்ஜமா) & விளக்கவுரை (தஃப்ஸீர்), மார்க்கச் சட்டங்கள் (ஃபிக்ஹ்), வரலாறு (சீரா), நபிமொழி (ஹதீஸ்), ஆய்வுகள், நற்பண்புகள் மற்றும் பல்வேறு பிரிவுகளில் புதிய / நல்ல நிலையில் உள்ள பழைய தமிழ் நூல்கள் மட்டும் வழங்கப்பட்டன.
குவைத் வாழ் தமிழ் மக்கள் அனைவருக்கும் பயன்படும் வகையில் இந் நூலகத்தை மேலும் சிறப்புற இயங்கச் செய்யும் பெரும் முயற்சி… மக்களிடமிருந்து… மக்களுக்காக… அறிவுசார் நூல்களை நூலகத்திற்குக் கொடையாகப் பெறுகின்றோம்.
நூல்களை ஒப்படைக்க….
– K-Tic தமிழ் பள்ளிவாசல், அர்திய்யா (ஜுமுஆவில் மட்டும்)
– மூன் கார்மென்ட்ஸ், இஞ்சி டீ கடை அருகில், மிர்காப்
– அல் ஃபத்ஹ் மதரஸா (6585 2183), ஜலீப்
– மௌலவி ஜலீல் ரப்பானி (9802 3034), மஹ்பூலா
– ஜனாப் மதார்ஷா (6676 2103), ஹவல்லி
– ஜனாப் அப்துர் ரஹ்மான் (9493 6593) சால்மியா
– ஜனாப் ஜுபைர் (5579 6983), கைத்தான்
– ஜனாப் அஷ்ரப் அலி (9765 3374), ஃபர்வானியா
– ஜனாப் அப்துர் ரஹ்மான் (9934 1315), பர்வானியா
மேலதிக விபரங்கள் இணைப்பில்… https://www.facebook.com/share/p/1BpQPzTr9m/
செய்தி:
கலீல் பாகவீ,
பொதுச் செயலாளர்,
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)
+965 9787 2482




