சாயல்குடி வட்டார அனைத்து ஜமாஅத் மற்றும் இயக்கங்கள் சார்பில் கண்டன பொதுக்கூட்டம்!

சாயல்குடி வட்டார அனைத்து ஜமாஅத் மற்றும் இயக்கங்கள் சார்பில் கண்டன பொதுக்கூட்டம்!

இராமநாதபுரம் மாவட்டம்
சாயல்குடி வட்டார அனைத்து ஜமாஅத் மற்றும் இயக்கங்கள் சார்பில் வக்ஃப் திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி சாயல்குடி பெரிய பள்ளிவாசல் அருகில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
எஸ் டி பி ஐ கட்சி இராமநாதபுரம் மேற்கு மாவட்ட தலைவர் நூருல் அமீன் மற்றும் மாவட்ட செயலாளர் கன்சுல் மஹரிபா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
சாயல்குடி பெரிய பள்ளிவாசல் தலைவர் அப்துல் முத்தலிபு தலைமையில் நடைபெற்ற இப்பொதுக்கூட்டத்தை தமுமுக தலைமைப்பிரதிநிதி வழக்கறிஞர்.சம்சுதீன் சேட் தொகுத்து வழங்கினார்.
இந்நிகழ்வில் இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி , இஸ்லாமிய பிரச்சாரப்பேரவை மாநில செயலாளர் அப்துல் காதிர் மன்பஈ, ஐக்கிய ஜமாஅத் மாவட்ட பொதுச் செயலாளர் ஜெய்னுல் ஆலம் , ஏர்வாடி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் செய்யது அப்பாஸ், ஜமாஅத்துல் உலமா சபை செயலாளர் சிக்கந்தர் ஆலிம், உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
பொதுக்கூட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர் சம்சுகனி, செயலாளர் அண்ணல் முஹம்மது, பொருளாளர் ரியாஸ்கான் ஆகியோர் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
எஸ் டி பி ஐ கட்சி இராமநாதபுரம் மேற்கு மாவட்ட பொதுச் செயலாளர் பாஞ்சுபீர், மாவட்ட துணைத் தலைவர் மௌலவி மீரான் முஹைதீன் மன்பஈ, மாவட்ட செயலாளர் காஜா முஹைதீன், முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி தலைவர் முஹம்மது ரபீக், தொகுதி செயலாளர் சத்தார் மைதீன், தொகுதி துணைத் தலைவர் நூர் முஹம்மது, தொகுதி இணைச் செயலாளர் சாகுல் ஹமீது சேட், தொகுதி பொருளாளர் தஸ்தகீர், சாயல்குடி நகர் தலைவர் முசாபர் அலி சாயல்குடி நகர் பொருளாளர் நவாஸ் கான், நரிப்பையூர் பஞ்சாயத்து கமிட்டி தலைவர் அண்ணல் முஹைதீன், செயலாளர் இம்ரான், உள்ளிட்ட எஸ் டி பி ஐ கட்சி நிர்வாகிகள்,
டபிள்யு.ஐ .எம் மாவட்ட துணைத் தலைவர் ரசியா பேகம், மாவட்ட செயலாளர் சம்சு பேகம், சாயல்குடி ஜமாஅத் செயலாளர் முஹம்மது இத்ரீஸ் , முன்னாள் ஜமாஅத் தலைவர் முஹம்மது ஜின்னா, திமுக ஒன்றிய செயலாளர் குலாம் முஹைதீன் உள்ளிட்ட ஜமாஅத் நிர்வாகிகள், இஸ்லாமிய இளைஞர் மறுமலர்ச்சி மன்ற நிர்வாகிகள் மற்றும் திரளான பெண்கள் , இளைஞர்கள் கலந்து கொண்டு பொதுக்கூட்டத்தை சிறப்பித்தனர்.



