General News

முதுகுளத்தூர்.காம் இணையத்தளத்துக்கு முஸ்லிம் லீக் தலைவர் வாழ்த்து

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )

ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்தின் மூலம் சகோதரர் முதுவை ஹிதாயத் அவர்களால் நிர்வகிக்கப்பட்டு வரும் முதுகுளத்தூர்.காம் இணையதளம் இயங்கும் நற்செய்தி அறிந்து பெரிதும் மகிழ்ந்தேன்.

இன்றைக்கு உலகம் மிகவும் சுருங்கி, ஒரு கைக்குள் அடக்கம் என்று சொல்லும் அளவுக்கு விஞ்ஞான வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது.

அறிவியலால் வரும் பயன்களை முதுகுளத்தூர் ஜமாத்தினர் பயன்படுத்தித் தங்கள் ஊரின் சிறப்பை உலக அரங்கில் உயர்த்தியிருப்பது மிகுந்த பாராட்டுக்குரியது.

தமிழக முஸ்லிம் சமுதாய வரலாற்றில் முதுகுளத்தூருக்குத் தனி இடம் உண்டு. ஒரு காலத்தில் கண்ணியத் தென்றல் காயிதே மில்லத் அவர்களுடன் இணைந்து, கடல் கடந்து சென்று நிதி திரட்டி, தமிழகத்தில் உயர்கல்விக் கூடங்களுக்கு உதவியவர்கள் இந்நகரச் சான்றோர். பர்மா, சிங்கை, மலேசியா நாடுகளில் உழைக்கச் சென்று தங்களையும் உயர்த்தி, தங்களின் ஊரின் பெருமையையும் உயர்த்தி யுள்ள உயர்ந்த நன் மக்கள் நிறைந்த பேரூர் முதுகுளத்தூர்.

இந்த ஊரில் அன்றாடம் நடைபெறும் அரிய பெரிய நிகழ்வுகளை இப்பொழுது உலகம் முழுவதுக்கும் தெரிவிக்கும் சாதனமாக முதுகுளத்தூர்.காம் இணையதளம் விளங்குகிறது என்று அறிய பெரு மகிழ்ச்சி ஏற்படுகிறது.

எல்லா வகையிலும் முன்மாதிரியாக இலங்கிட என் இதய வாழ்த்துக்கள்

தங்கள் அன்பன்
பேரா. கே.எம். காதர் மொகிதீன்

துபை
15-04-2010

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button