கவிதைகள் (All)

மகாகவி பாரதியார்

மகாகவி பாரதியார் (11-12-1882 ~ 12-09-1921)

பாருக்குள்ளே நல்லநாடு பாரதநாடு,

பாரதியை நமக்களித்த தாய்நாடு,

கவிதையை கருத்திலே கொண்டேன்,

கவிஞரின் கவிதைக்குள் கரைந்தேன் !

கல்வடிவான கடவுள் சிலைபோன்று,

சொல்வடிவான செந்தமிழ்க் கலையவன்,

‘முண்டாசு’ கவிஞனின் மேன்மையை,

‘தண்டோரா’ தட்டிச் சொல்லத்தகுமோ ?

மரபுக்கவியும் புதுக்கவியும் முத்தமிட,

தரவுகளாயிரம் தராமாய்த் தந்தவன்,

பாரதியின்றி கவிதையேதும் யாத்தலில்லை,

சாரதியின்றி கவிதைத்தேரும் நகர்வதில்லை !

உயர்த்தமிழில் கவிதைகள் செய்வித்தவன்,

பயந்தோர்க்கு எழுச்சிமிகு பாப்புனைந்தான், 

வஞ்சனை செய்தே வாழ்வோருக்கும்,

கொஞ்சும் தமிழாலே கடிந்துரைத்தான் !

படைக்கலனாய் பாரதியின் கவிதைகள்,

மடைதிறந்த வெள்ளமாய் பாய்ந்துவரும் ,  

தடையில்லா எழுச்சியூட்டும் கருத்துகள்,

விடைகண்டு தெளிந்தாலே வலுவூட்டும் !

புயலாய்வீசிய பெரும்புலவன் இறுதிக்கு,

அயலான்போல் ஐயிருவரோடு நால்வரே,

அலைகடலாய் தமிழினம் அன்றிருந்தும்,

தலைமகனின் இறுதிவழிக்கு தயங்கியதே !

—கருணாகரன் சுப்பையா—

மலேசியா

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button