General Newsதமிழ்நாடு

தீபாவளி திருநாளில் விதை குண்டுகள்

தீபாவளி திருநாளில் விதை குண்டுகள் எல்லையாக இருந்தால் இராணுவம், தொல்லையாக இருந்தால் போலீஸ், வேலையாக வேண்டுமானால் மாணவ மாணவியர். இதுதான் நடைமுறை உண்மை. பாதுகாப்பிற்கு இராணுவத்தை நாடலாம். பிரச்சனைகளை தீர்ப்பதற்கு காவல்துறையினரை நம்பலாம். முக்கியமான வேலைகளை முடிப்பதற்கு மாணவ சக்தியை நம்பினால் மகத்தான வெற்றி கிட்டும் என்பதற்கு தற்போது தமிழகத்தில் நடந்து வரும் விதைப்பந்து புரட்சியே சாட்சி. 

மாணவ மாணவியர் ஒரு தடவை முடிவு செய்துவிட்டால் அது நடந்தே தீரும். முடிவை எட்டும் வரை மாணவ சக்தி தூங்காது. இதுதான் கடந்த கால வரலாறும் கூட.

 மெட்ரிக், சிபிஎஸ்இ, தனியார், அரசு, அரசு உதவி பெறும், ஆர்.சி, சிஎஸ்ஐ, தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, நர்சரி பள்ளிகள் என விதைப்பந்துகள் தயாரிப்பு ஒரு கோடியை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது. தென்காசி மாவட்டம், வெங்காடம்பட்டி டிரஸ்ட்- இந்தியா பள்ளி இந்த விதைப்பந்து புரட்சியில் பங்கெடுத்துள்ளது. அங்கு படிக்கும் சிறு பிள்ளைகள் ஆர்வமாக ஆயிரக்கணக்கில் விதைப்பந்துகளை செய்து குளக்கரை, ஓடை, சாலையோரம், தனியார் தரிசு நிலப்பகுதி என இந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இயற்கைக்கு அர்ப்பணித்துள்ளனர். தலைமை ஆசிரியை சாந்தி ஆசிரியைகள் மாரிச்செல்வம், சாந்தி, காளியம்மாள், முத்துச்செல்வி, பவித்ரா குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்துச் சென்று விதைப்பந்துகளை பத்திரமாக வீசினர். இதில் ஈடுபட்ட குழந்தைகளுக்கு சமூக நல ஆர்வலரும் டிரஸ்ட்- இந்தியா பள்ளி தாளாளருமான வெங்காடம்பட்டி பூ. திருமாறன் சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்தினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button