கவிதைகள் (All)

மீலாது நபி வாழ்த்துக்கள்

மீலாது நபி வாழ்த்துக்கள் 

அரேபியாவின் மெக்காவில் , 

ஆனை வருடத்தில்   இறைவன்  

அல்லாஹ்வின் தூதராய்  

அவதரித்தார் நபிகள் நாயகம் 

அல்லா ஒருவரே கடவுள் 

எல்லாப்புகழும் இறைவனுக்கே .

அவர் காட்டும் வழியினிலே 

அனைவரும் நடந்திடவே  

அருமறையாம் குர் -ஆனை  

அளித்திட்ட தவ சீலர் . 

வறியவர்க்கு ஈதலும் 

வேளை தவறாத தொழுகையும் 

இஸ்லாத்தின் இருகண்கள்  

மனித நேயமே புனித நேயம் 

என்றுரைத்த புனிதரவர்.

பெண்களுக்கு மரியாதை தருதல்

பெருமைக்குரியதென்று உரைத்தவர். 

அஸ்ஸலாமு அலைக்கும் என்று 

அனைவருக்கும் வணக்கம் செய்திடுவோர்  

வாலைக்கும் அஸ்ஸலாமு என்று 

பதில் வணக்கம் செலுத்திடுவோர் .

இன்ஷா அல்லாஹ் என்று அல்லாஹ்வின் 

இஷ்டப்படி வாழ்ந்திடுவோர் 

மாஷா அல்லாஹ் என்று அல்லாஹ்வின் 

கருணையில் வாழ்ந்திடுவோர் 

நபிகள் நாயகம் வகுத்த   

திருக் குர்ஆனில் உள்ளதுபோல் 

வன்முறையைத்தான் தவிர்த்து 

நன்முறையில் வாழ்ந்திடுக.  

அமைதி மார்க்கம் பின் பற்றி 

இஸ்லாமியச் சமுதாயம் 

எங்கெங்கும் வளர்ந்திடுக .

இவ்வுலகும் தழைத்திடுக .

சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்  05.09.2025. 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button