ஆருத்ரா தரிசன விழா!

ஆருத்ரா தரிசன விழா!

இராமநாதபுரம் மாவட்டம், திருஉத்தரகோசமங்கை மங்களநாதர்சுவாமி கோயிலில் ஆருத்ராதரிசன விழா நடைபெற்றது. காலையில் மரகத நடராஜருக்கு சந்தனம்களையப்பட்டுஅபிஷேகங்களும், தொடர்ந்து 24 மணி நேரம் நாட்டியாஞ்சலியும் நடக்கிறது. உலகின்முதல் சிவன் கோயில் என்று அழைக்கப்படும் மங்களநாதர் சுவாமி கோயிலின் வடக்கே மரகத-ஷாந
நடராஜருக்கு தனி சன்னதி உள்ளது. இங்கு டிசம்பர் 25 ஆம் தேதி முதல் ஆருத்ராதரிசனவிழாதுவங்கியது. முக்கிய நிகழ்ச்சியாக இன்று காலை 8,30 மணிக்கு
மரகதநடராஜருக்குபூசப்பட்டசந்தனம்களையப்பட்டு காலை 9 மணி முதல் தொடர்ந்து 32 வகையான அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. இதில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இரவு 10 மணிக்கு கல்தேர் மண்டபத்தில் கூத்தர் பெருமான் எழுந்தருளி பூஜைகள் நடக்கிறது. நாளை ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு அதிகாலை 1 மணி முதல் 2 மணிக்குள்மீண்டும்ஆருத்ராமகாஅபிஷேகங்களுக்கு, பின்னர் புதிய சந்தனம் மரகத நடராஜர் சிலையில் சாத்தப்பட்டு அலங்காரத்தில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. காலை 10 மணிக்கு கூத்தர் பெருமான் வீதியுலா, மாலை 5 மணிக்கு பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகம், இரவு 8 மணிக்கு மாணிக்கவாசக சுவாமிகளுக்குகாட்சியளித்துதீபாராதனைநடக்கிறது. அன்று இரவு மீண்டும் புதியசந்தனக்காப்புபூசப்படும். அடுத்த ஓராண்டு வரை இந்தச் சந்தனக் காப்பிலேயே பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இந்த விழாவை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.




