இராமநாதபுரம்

திமுகவில் மாற்று கட்சியினர் இணையும் நிகழ்வு

திமுகவில் மாற்று கட்சியினர் இணையும் நிகழ்வு

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 1000க்கும் மேற்பட்ட மாற்று கட்சி நிர்வாகிகள், திமுக தென் மண்டல பொறுப்பாளர் நிதி மற்றும் சுற்றுசூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் முன்னிலையில் தமிழ்நாட்டின் மண் மொழி மானம் காக்கிற அரசாக இருக்கிற தமிழக அரசில் ஓரணியில் தமிழ்நாடு என்கிற முன்னெடுப்பின் மூலம் தங்களை திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைத்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு ஓரணியில் தமிழ் நாடு என்கிற மகத்தான திட்டத்தின் மூலம் 1000 மேற்பட்ட மாற்று கட்சி தோழர்கள் உறுப்பினராக மட்டும் இல்லாமல் ஓர்இயக்கமாக ஒன்றிணைத்த மாவட்டமாக இராமநாதபுரம் மாவட்ட திமுக தனி சிறப்பை பெற்றது என்று அமைச்சர் பாராட்டினார். இந்நிகழ்வில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன், நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி, முன்னாள் அமைச்சர் சுந்தர்ராஜன் மற்றும் திமுகவின் ஒன்றியம், நகரம், பேரூர் கழக செயலாளர் கள் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button