கமுதி பேருந்து நிலையத்தில் ஆபத்தான பள்ளத்தால் பயணிகள் அவதி

கமுதி பேருந்து நிலையத்தில் ஆபத்தான பள்ளத்தால் பயணிகள் அவதி

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேருந்து நிலையத்தில் பேருந்துகள் வெளியே செல்லும் வாயிலில் கடந்த 10 ஆண்டுகளாக மிகப்பெரிய பள்ளம் உள்ளது. இந்தப் பள்ளம் குடிநீர் குழாய் இணைப்புக்காக வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பள்ளத்தை சுற்றிலும் பெரிய கற்ளால் தற்காலிகமாக மூடி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பேருந்து நிலையத்துக்கு வரும் பயணிகள், அவ்வழியாகச் செல்லும் சிறுவர்கள் அதில் விழுந்து கை, கால் முறிவு ஏற்பட்டு காயமடைந்த வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் தலையிட்டு பள்ளத்தில் மேல் வைக்கப்பட்டுள்ள கற்களை அகற்றிவிட்டு, கான்கிரீட் மூடிகள் அமைத்து பொதுமக்களின் அச்சத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இது தொடர்பாக கமுதி பேரூராட்சி செயல் அலுவலர் யசோதாவிடம் கேட்டபோது பேரூராட்சி ஊழியர்கள் மூலம் விரைவில் சீரமைக்கப்படும் என்றார்.




