இராமநாதபுரம்
நயினார்கோவிலில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் துவங்கப்பட்ட உங்களுடன் ஸ்டாலின் மகத்தான திட்டத்தினை பரமக்குடி சட்டமன்றத் தொகுதி நயினார்கோவிலில் நடைபெற்ற முகாமை பரமக்குடி சட்டமன்றஉறுப்பினர் முருகேசன் அவர்கள் துவக்கி வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்வில் பரமக்குடி வட்டாட்சியர் வரதன் நயினார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர் தேவப்பிரியதர்ஷினி மற்றும் நயினார்கோவில் ஒன்றிய கழகச் செயலாளர்கள் சக்தி மற்றும் அண்ணாமலை ஒன்றிய துணைச் செயலாளர்கள் வாசு மற்றும் மனோகரன் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கணேசன் மற்றும் மணிமண்ணன்,மாவட்ட பிரதிநிதி கோவிந்தன் மற்றும் அரசமணி அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் கிளைக் கழக செயலாளர்கள், பிரதிநிதிகள், திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.





