இராமநாதபுரம்முதுகுளத்தூர்
முதுகுளத்தூரில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம்

முதுகுளத்தூரில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம்

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல் பரவாமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பேரூராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக தெருக்கள் மற்றும் தொட்டிகளில் தேங்கி கிடக்கும் தண்ணீரை பேரூராட்சி ஊழியர்கள் அகற்றி வருகின்றனர். சேகரித்து வைக்கப்படுகிற தண்ணீரில் அபேட் மருந்து தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் சுகாதாரப் பணியாளர் நேதாஜி உடன் இருந்தார்.




