கவிதைகள் (All)
உலகெலாம் பரவிய நலஞ்சேர் மக்கள்
உலகெலாம் பரவிய நலஞ்சேர் மக்கள்
***.
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
இறைநெறியை அமெரிக்கர்க் கெடுத்து ரைப்பார்
எம்பெருமான் மொழிபேசி இலங்கை செல்வார்
மறைநெறியை சிங்கப்பூர் உணரச்செய்து
மலாயாவும், பர்மாவும் வியக்க வாழ்வார்
நிறைநெறியால் அரபுநாட்டின் குடிகளாகி
நெஞ்சார ஹாங்காங்கில் ஜப்பான் நாட்டில்
குறையறியாக் குடியேற்றம் கண்டிருப்பார்
குலம்விளக்கும் திருக்காயல் பதிப் பிறந்தார்
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
- கவிஞர் மு. காஜா முஹ்யித்தீன் எம்.ஏ.-
நூல் : “காவியக் காயல்”
தகவல் : காயல் அமானுல்லாஹ்