இலவச இருதய பரிசோதனை முகாம்

கீழக்கரை ரோட்டரி சங்கம் ஈஸ்ட் கோஸ்ட் ராம்நாடு ரோட்டரி சங்கம் மற்றும் சென்னை அப்பல்லோ குழந்தைகள் நல மருத்துவமனை இணைந்து நடத்திய குழந்தைகளுக்கான இலவச இருதய பரிசோதனை முகாம் கீழக்கரை பி எஸ் எஸ் ஜே நாடார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெற்றது இந்த முகாமை மாவட்ட ஆளுநர் தினேஷ் பாபு அவர்கள் தொடங்கி வைத்தார்

இதில் 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கு பெற்றனர் அதில் ஐந்து குழந்தைகள் சென்னை அப்போலோ குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று இலவச அறுவை சிகிச்சை செய்ய உள்ளார்கள் இந்த நிகழ்ச்சியில் மாவட்டத் துணை ஆளுநர் சுந்தரம் ஹார்ட் கேம்ப் சேர்மன் லியாக்கத் அலி டிஸ்ட்ரிக்ட் அட்மினிஸ்ட்ரேஷன் கமிட்டி adv பார்த்தசாரதி சரவணன் கீழக்கரை ரோட்டரி சங்கத் தலைவர் சிவகார்த்திக் செயலாளர் சதீஷ் ஈஸ்கோஸ்ட் ராம்நாடு ரோட்டரி சங்கத் தலைவர் ஜெகன் அகிலன் கீழக்கரை முன்னாள் ரோட்டரி சங்க தலைவர்கள் கேசவன் சுப்பிரமணியன் மற்றும் எபன் சித்திரவேலு ஷர்புதீன் தர்மராஜா சகத் இளவரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்




