பேரிடர் மேலாண்மை

ஐந்தாம் நாள் : செப்டம்பர் 30, 2025 (செவ்வாய் கிழமை)
பேரிடர் மேலாண்மை
தீ விபத்து மற்றும் தடுப்பு பயிற்சி செயல்முறை
பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் மு.வாகைக்குளம் கிராமத்தில் 26.09.2025 முதல் 02.10.2025 வரை 7 நாள் சிறப்பு முகாம் நடைபெற்று வருகின்றது. ஐந்தாம் நாள் நிகழ்வான இன்று 30.09.2025 தீ விபத்து தடுப்பு பயிற்சி மற்றும் பேரிடர் மேலாண்மை மற்றும் செயல்முறை விளக்கம் நடைபெற்றது. இந்த விழாவிற்கு மு.வாகைக்குளம் கிராமதலைவர் க.ஆறுமுகம் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் தலைமை வகித்தார்கள். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் நூருல் அமீன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்கள். அதனை தொடர்ந்து முதுகுளத்தூர் தீயணைப்பு சிறப்பு நிலைய அலுவலர் (பொ) து.மாடசாமி அவர்கள் தலைமையிலான தீ அணைப்பு மற்றும் மீட்பு குழுவினர்கள் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களுக்கும் கிராம பொது மக்களுக்கும் தீ விபத்து தடுப்பு பற்றியும் மற்றும் பேரிடர் மேலாண்மை காலங்களில் பொது மக்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை பற்றியும் செய்ய வேண்டிய முதலுதவி . இயற்கை இடர்பாடுகள் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆகியவற்றை எடுத்து கூறி செயல் விளக்கம் மூலம் விளக்கி காண்பித்தார்கள். இந்த நிகழ்வுகளை நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் நூருல் அமீன் அவர்கள் ஒருங்கிணைத்தார்கள். இதில் ஊர் பொது மக்கள் இளைஞர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். அதன்பிறகு நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் உழவார பணிகளில் ஈடுபட்டனர்.








