கவிதைகள் (All)

வெளிநாட்டில் வாழு(டு)ம் உள்ளங்கள்

dollarஆயிரமாயிரம் ஆசைக்
கனவுகளைச் சுமந்து
அயல்நாட்டில் வாழுகின்றோம்ஆனால் வாழ்கையின்
அர்த்தம் புரியாமல்
வாடுகின்றோம் நாங்கள்!!

திரைகடல் திரவியம்
திராம் கணக்கில்
திரட்டினோம்
திறைமறைவு காரியங்கள்
செய்யாமல்.

அரபிக்கடல் கடந்தோம்
ஆயிரம் தினார்கள்
அட்லாண்டிக் சமுந்திரம்
கடந்தோம் பல்லாயிரம்
யூரோக்கள், டாலர்கள் !!

அன்பெனும் சாகரத்தில்
மூழ்கி, பாசம் எனும்
முத்தெடுக்க தேடுகின்றோம்
ஒரு திரைகடலை, ஆனால்
அதுவோ பாலைவனத்து
கானல் நீராய் மாறி
காலங்கள் பலவாகி
விட்டது!!

எங்களால் அழவும்
முடியாது. காரணம்
எங்கள் கண்ணீரும்
பெட்ரோலாகி காற்றிலே
கலந்து காலமாகிவிட்டது !!

நினைவுகளின் வேதனையில்
வாடு(ழ்)கின்றோம்!!
கனவுகளின் நினைவுகளுக்காக
உறங்குகின்றோம்!!

அந்நிய நாட்டில்
சொந்த நாட்டின்
மூச்சுக் காற்றை
சுகமாக சுவாசிக்க
ஏங்குகின்றோம்!!

அன்புடன் பாலா
முடிந்த பொழுது நல்லதையே செய்
முடியாத பொழுது நல்லதையே நினை

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button