கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகம் அருகில் கடை திறப்பு விழா

கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகம் அருகில் கடை திறப்பு விழா

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் கடை திறப்பு விழா இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகம் அருகே கண்ணாடி வாப்பா வளாகத்தில் நடைபெற்றது.தமிழ்நாடு வருவாய்த்துறை தென் மண்டல பொதுச் செயலாளர் காசிநாதன் துரை கலந்து கொண்டு சிறப்பித்தார்,கீழக்கரை வட்டாட்சியர் செல்லப்பா தமிழ்நாடு வட்டாட்சியர் அலுவலர்கள் சங்கம் மாவட்ட தலைவர் எஸ் பழனி குமார் ஆகியோர் கடையை திறந்து வைத்தனர்.
கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகத்தின் அருகே பொதுமக்கள் பயன்படும் வகையில்,இணைய தள சேவை மையம், கேண்டியன் வசதி ஆகியவை அடங்கும் இந்நிகழ்வில் ஊர் முக்கியஸ்தர்கள், கீழக்கரை நகராட்சி கவுன்சிலர் சேக் உசேன், அரசியல் கட்சி நிர்வாகிகள்,ஜமாத்தார்கள் கலந்து கொண்டனர்,அனைவரையும் அதிமுக
இளைஞர் அணி மாவட்ட இணைச் செயலாளர் k.R சுரேஷ் வரவேற்றார்.




