விதைப் பந்துகள்விரிவாக்கம்தொடர்பாக விருதுநகர் எஸ். பி யுடன்திருமாறன் சந்திப்பு

விதைப் பந்துகள் விரிவாக்கம் தொடர்பாக விருதுநகர் எஸ். பி யுடன் திருமாறன் சந்திப்பு திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடந்து வரும் “விதைப்பந்துகள் தயாரிக்கும்” பசுமைப்பணி விரிவாக்கம் குறித்து விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் புளியங்குடி கண்ணன் I.P. S யை சமூக நல ஆர்வலர் வெங்காடம்பட்டி பூ. திருமாறன் சந்தித்து ஆலோசித்தார்.

போலீஸ் எஸ்.பி யை சந்திக்க நடுவப்பட்டி திரு. ராமமூர்த்தி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களை திருமாறன் நேரில் அழைத்துச் சென்றிருந்தார்.
விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர் பகுதிகளிலுள்ள பள்ளிகளில் விதைப்பந்து தயாரிப்பை எஸ்.பி கண்ணன் வரவேற்றார்.
இந்த சந்திப்பின்போது பழைய மாணவர் ஜெயா ஆனந்த், சிவகாசி வீரப்பன், பசுமை ஜவகர், நடுவப்பட்டி அரசு பள்ளி ஓவிய ஆசிரியர் பாரத் குமார், +2 மாணவர்கள், கம்ப்யூட்டர் ஆசிரியை அமுதா உடனிருந்தனர்.
எஸ்.பி கண்ணனுக்கு டாக்டர்கள் தென்காசி தங்கபாண்டியன், செங்கோட்டை சுப.திருவன் வெளியிட்டுள்ள பாரதியார் கவிதைகள் தமிழ் மற்றும் ஆங்கில மொழியாக்கம் வழங்கப்பட்டது. நெல்லி மரக்கன்றை மாணவர்கள் எஸ்.பி க்கு வழங்கினர். சந்திப்பு ஏற்பாடுகளை தலைமை ஆசிரியை மகேஸ்வரி செய்திருந்தார்.



