இராமநாதபுரம்

பரமக்குடியில் விழிப்புணர்வு மாரத்தான்!

பரமக்குடியில் விழிப்புணர்வு மாரத்தான்!

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மெழுகுவர்த்தி நண்பர்கள் பவுண்டேஷன் மற்றும் பரமக்குடி அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய
இரத்ததானம் மற்றும் உடல் உறுப்புகள் தான விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது.

பரமக்குடி அரசு மருத்துவமனையில் துவங்கி ஓட்டப்பாலம், 5முனை ரோடு, பேருந்து நிலையம், கிருஷ்ணா தியேட்டர் வழியாக அரசு கலைக்கல்லூரி வரை போட்டி நடைபெற்றது.

இப்போட்டியில் 650 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

போட்டியில் பள்ளி மாணவர்களுக்கான பிரிவில்.,
திருச்சி மாவட்டம், பாலசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் வெற்றிவேல் முதலிடமும்,
மதுரை மாவட்டம், மேலூர் ஜாஸ் மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவன் சுகந்த் இரண்டாமிடமும்,
காட்டுப் பரமக்குடி ஆதிதிராவிடர் உயர்நிலைப்பள்ளி மாணவன் லத்தீஷ் காந்த் மூன்றாம் இடமும் பெற்றனர்.

இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கான பொதுப் பிரிவில் தஞ்சாவூர் மாவட்டம் அழகப்பா பல்கலைக்கழக மாணவர் முரளிதரன் முதலிடமும், மதுரை மாவட்டம் சூரக்குண்டை சேர்ந்த பிரதீப் இரண்டாம் இடமும், கேரளாவைச் சேர்ந்த கிரண் மூன்றாம் இடமும் பெற்றனர். மேற்கண்ட வெற்றியாளர்களுக்கு முதல் பரிசு 5000/- இரண்டாம் பரிசு ரூ 3000/- மூன்றாம் பரிசு 2000/- என ரொக்கபணமும், பாராட்டு சான்றுகளும் பதக்கங்களும் வழங்கப்பட்டது.

பரிசளிப்பு விழாவில் பேசிய மெழுகுவர்த்தி நண்பர்கள் பவுண்டேஷன் தலைவர் முத்துக்குமார்.,
இரத்ததானம் என்பது கிணற்று நீரைப் போல அள்ள அள்ள புதிய நீர் உருவாவது போல தான் இரத்ததானம் செய்யும் போது நம் உடலுக்குள் புதிய ரத்தம் உருவாகி, உடலையும்; உடல் உறுப்புகளையும் பலப்படுத்துகிறது. மனிதர்களைப் படைத்தது கடவுள் தான் என்று இருந்தால்..
உடலில் குறைபாடுகளுடன் படைத்த கடவுள் எப்படி கடவுளாக இருப்பார்., உடலில் உறுப்புகள் செயலிழந்து குறைபாடுகளுடன் வாழ்நாள் முழுவதும் மருத்துவ சிகிச்சையில் இருந்து வரும் மனித குலத்தை தன் மரணத்திற்கு பின்னால் ஒருவர் செய்யும் உடல் உறுப்பு தானம் எட்டு பேருக்கு மறு வாழ்வு அளிக்கிறது.

முன்பெல்லாம் யார் இறந்தால் அரசு மரியாதை கிடைக்கும்?..
அரசு உயரிய பதவிகளில் இருப்பவர்கள், அரசு அதிகாரிகள், ராணுவ – காவல்துறை அதிகாரிகள், அரசு ஊழியர்கள், அரசியல் தலைவர்கள் போன்றோர் இறந்தால் அரசு மரியாதையோடு அவர்களது உடல் நல்லடக்கம் செய்யப்படும்., அதே வரிசையில் தற்போது தனது மரணத்திற்குப் பிறகு உடல் உறுப்புகளை தானமாக கொடுத்துச் சென்றவரின் நல்லடக்கத்தையும் அரசு மரியாதையோடு நல்லடக்கம் செய்ய தமிழக அரசு ஆணையிட்டிருக்கிறது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத ஒரு சிறப்பு தமிழக அரசு செய்திருப்பது பாராட்டத்தக்கது, போற்றுதலுக்குரியது என பேசினார்.

பரிசளிப்பு விழா மேடையில்.,
பரமக்குடியில் கண்தானம் செய்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு பலருக்கும் விழிஒளி பெற்றுக் கொடுத்த சமூக ஆர்வலர் குரு.சண்முகநாதன் அவர்களுக்கும்;
கடந்த மாதம் இயற்கை மரணமடைந்து தனது உடலை இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களின் கல்வி பயன்பாட்டுக்கு தானமாக கொடுத்த திருவாடனை அருகே உள்ள அறநூற்றின் வயல் கிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஆரோ.ஸ்டீபன் ராஜ் குடும்பத்தினரையும் கௌரவப்படுத்தி நினைவு பரிசு வழங்கப்பட்டது.

இப்போட்டிக்கான ஏற்பாடுகளை மருத்துவர் முத்தரசன், உயிர்த்துளி கோபாலகிருஷ்ணன், சையது இப்ராஹிம், மெழுகுவர்த்தி நண்பர்கள் பவுண்டேஷன் ஒருங்கிணைப்பாளர்கள் மாரியம்மாள் பாண்டியன், ராஜா, மரியா பீனிக்ஸ் பவுண்டேஷன் வசந்த் ஆகியோர் செய்து இருந்தனர்.
பரிசளிப்பு விழா நிகழ்ச்சியை ஆசிரியர் கரு. மோகன் குமார் தொகுத்து வழங்கினார் இறுதியில் சமூக ஆர்வலர் செந்தில் ராமு நன்றி கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button