இராமநாதபுரம்

பசும்பொன் பாசறை இரத்ததான அறக்கட்டளையின் முப்பெரும் விழா

பசும்பொன் பாசறை இரத்ததான அறக்கட்டளையின் முப்பெரும் விழா நடைபெற்றது.

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் பசும்பொன் பாசறை இரத்ததான அறக்கட்டளை சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.

பசும்பொன் பாசறை இரத்ததான அறக்கட்டளை மதுரையை தலைமையிடமாக கொண்டு பல்வேறு சேவைகள் செய்கிறது அதில் குறிப்பாக இரத்ததானம், அன்னதானம் கல்விபணி ஆகிய சேவைகளை செய்து வருகின்றனர். 21 வது ஆண்டு பசும்பொன் பாசறை இரத்ததான அறக்கட்டளை துவக்க விழா, குருதி கொடையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு பாராட்டுவிழா, கல்வி உதவித்தொகை வழங்கும் விழா என முப்பெரும் விழா கடலாடி தேவர் மண்டபத்தில் நடைபெற்றது. இராமநாதபுரம் மாவட்ட தலைவர் சுபாஷ் சந்திரபோஸ் அனைவரையும் வரவேற்றார், அறக்கட்டளையின் தலைவர் மூ. கண்ணன், அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மூத்த தலைவர் வி.எஸ். நவமணி ஆகியோர் தலைமையில் ஆப்பநாடு மறவர் சங்க தலைவர் டாக்டர் இராம்குமார் ,கடலாடி நகர் தேவர் மகாசபை தலைவர் ஜெகநாதன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்புவிருந்தினராக பாரதிய பார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவர் கே.ஏ.முருகன் ஜீ, தேசியத்தலைவர் திரைப்பட தயாரிப்பாளர் ஏ.எம். சௌத்ரி , தமிழக அரசின் சுற்றுச்சூழல் காவலர் விருது பெற்ற பைரவி அறக்கட்டளையின் தலைவர் பைரவி ஷோபா, முக்குலத்தோர் கல்வி மையத்தின் நிர்வாகிகள் சே. அக்கினிரகுபதி,சு. சமயத்துரை, தெய்வீகத் திருமகனார் பசும்பொன் தேவர் சிந்தனை மன்றத்தின் தலைவர் வழக்கறிஞர் மு. ஆறுமுகம், வீரவிளையாட்டு ஆர்வலர் செல்வகணேஷ், ஆப்பநாடு வரலாறு ஆய்வாளர் வே.மாயகிருஷ்ணன் , ஸ்ரீ பகவதி அறக்கட்டளையின் தலைவர் மு.வெள்ளைப்பாண்டியன், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். தமிழகம் முழுவதும் இரத்ததானம் செய்த குருதி கொடையாளர்கள், சமூக ஆர்வலர்கள், 10,12ம் வகுப்பில் அதிகளவில் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது, முன்னதாக கடலாடி தேவர் சிலைவரை சாத்தூர் தங்கப்பாண்டியன் பாண்டிய சிலம்பம் கலை மாணவர்கள் ஊர்வலமாக சென்று சிலம்பம் அடித்து அனைவரையும் வரவேற்றார்கள், நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள், இரத்ததான சேவகர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், மகளிர் சுய உதவி குழுக்கள் அனைவருக்கும் விருதுகள், சான்றிதழ், மரக்கன்றுகள், அனைத்தும் வழங்கப்பட்டது. தமிழ்நாடு இளைஞரணி தலைவர் நேதாஜி சப்பாணி, பசும்பொன் தேவர் கல்லூரி முன்னாள் மாணவர் சங்க நிர்வாகி தர்மர் இருவேலி ஜாஹிர் உசேன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்தார்கள். அறக்கட்டளையின் இளைஞரணி நிர்வாகி க.அஜித்குமார் நன்றியுரை கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button