கவிதைகள் (All)
ஒத்தையிலபோற புள்ள
ஒத்தையில
போற புள்ள
செத்த நில்லு
நானும் வரேன்.
மவராசன்
என்
மாமேன்
பெற்றெடுத்த
பெட்டகமே.
அரும்பு
மீசை
முளைச்சுருச்சு
ஆசை
கொஞ்சம்
துளித்திருச்சு.
வயல்
வெளிக்கு
போறயாக்கும்
வரப்பு மேல
முள்ளிருக்கும்.
துணைக்கு
நானும்
வந்தேன்னா
தூக்கிப்போயி
சேர்த்துடுவேன்.
உன்
அப்பனுக்கு
கொண்டு செல்லும்
அரிசி சோறு
கொஞ்சம்
போதும்.
நானும்
நீயும்
சாப்பிடுவோம்
நயம்பட
கொஞ்சம்
பேசிடுவோம்.
நாணத்தை
விட்டுவிடு..
நல்லத
சொல்லிக்கொடு.
உன்
பேச்சு
கேட்கத்தானே…
ஊரு விட்டு
நானும் வந்தேன்.
ஏன்ட
நீயும் பேசலனா
என் இதயம்
என்ன ஆகும்.
மாமன்டா
சொல்லிக்கிறேன்
உன்
மடியில நானும் உறங்கட்டுமா.
ஊறவச்ச
வெத நெல்லை
உழுது நானும்
வெதைக்கும்
முன்பு
உன் இதயம்
ஏத்துகிட்டா…
என்
வயலில்
பயிர் விளையும்.
அரும்பு கவி
அன்வர் உசேன்
இராமநாதபுரம்.