ரோட்டில் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால்…நெருக்கடி… போக்குவரத்தில் திணறும் கீழக்கரை, முதுகுளத்தூர்

Vinkmag ad

டூவீலர்கள், ஆட்டோக்கள், லாரிகள் போன்ற வாகனங்களை ரோட்டோரங்களில் தாறுமாறாக நிறுத்தி விடுவதால், கடும் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி, கீழக்கரையும், முது குளத்தூரும் திணறுகிறது

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வளர்ந்து வரும் நகரங் களில் ஒன்று கீழக்கரை. இங்கு நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால், தினமும் காலை 8:30 முதல் பகல் 11:00 மணி வரை, நகருக்குள் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலில், பள்ளி மாணவ, மாணவிகளும், அரசு ஊழியர்களும் சிக்கி தவிப்பது வாடிக்கையாக உள்ளது.

கீழக்கரை லிட்டரி கிளப் முதல் முஸ்லிம் பஜார் வரை யிலும், வி.ஏ.ஓ., சாவடி முதல் கடற்கரை சாலை வரையிலும் உள்ள ரோட்டோரங்களில் உள்ள கடைகள், வணிக வளாகங் களின் முன் டூவீலர்கள், ஆட்டோக்கள், லாரிகள் தாறு மாறாக நிறுத்தப்படுகின்றன. இதனால், இப்பகுதியில் பள்ளி, கல்லூரி வேன்கள், பஸ்கள், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் போன்ற எந்த வாகனமும், அவசர தேவைக்கு வேகமாக செல்ல முடியாத அளவிற்கு கடும் போக்குவரத்து நெருக்கடி உள்ளது.

 

இதுகுறித்து சமூக நல நுகர்வோர் சேவை இயக்க செயலாளர் தங்கம் அப்துர் ரகுமான் கூறுகையில்,”” கடந்த 1994ல் வாகனங்களை “பார்க்கிங்’ செய்வதற்கு தடை செய்யப் பட்ட பகுதியாக அப்போதைய கலெக்டரால் அறிவிக்கப்பட்ட இச்சாலையில் ஐந்து வங்கிகள் <உள்ளன. நாளுக்கு நாள் வாகனங்கள் பெருகிவரும் நிலையில், 5 வங்கிகளின் முன்பாக “பார்க்கிங்’ செய்யும் வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்பட்டு பள்ளி மாணவர்கள், பொது மக்கள் அவதிப்படும் நிலை உள்ளது. நகராட்சி நிர்வாகமும், போலீசாரும் இணைந்து ஆக்கிரமித்துள்ள வாகனங்களின் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தீர்வு காணமுடியும்,” என்றார்.

 

முதுகுளத்தூர்:

 

இதேபோல் முதுகுளத்தூரில் பஸ் ஸ்டாண்ட், பஜார் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித் துள்ளன. முதுகுளத்தூர் – பரமக் குடி ரோடு, கமுதி- தேரிருவேலி செல்லும் ரோடுகளின் ஓரங்களில், தினமும் பகல் நேரங்களில் அளவுக்கு அதிகமாக வாகனங்கள் நிறுத்தப் படுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

முதுகுளத்தூர்- பரமக்குடிக்கு பஸ்சில் செல்ல 45 நிமிடம் போதும். ஆனால், போக்கு வரத்து சிக்கலிலிருந்து மீளவே, 30 நிமிடம் தேவைப்படுகிறது. இதற்கு காரணம் டூவீலர்கள், சரக்கு வாகனங்களை கடை களின் முன் தாறுமாறாக நிறுத்து வது தான்.

கடந்த ஒரு வாரத்தில், கடம்பன்குளம், கீழச்சிறுபோது, கீரனூர் உள்ளிட்ட ஊர்களை சேர்ந்தவர்கள் முதுகுளத்தூரில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி யுள்ளனர்.

இதுகுறித்து செந்தில் என்பவர் கூறுகையில், “” முது குளத்தூரில், ரோட்டோரங் களில் தான் அதிகமான பள்ளிகள் உள்ளது. மாணவ, மாணவிகள் பள்ளிக்கு சென்று, திரும்பும் நேரங்களில், பள்ளி அருகே வரிசையாக நிறுத்தப் பட்டிருக்கும் சரக்கு வாகனங் களால் விபத்துக்கள் நடக்கிறது. இதனால் பள்ளிக்கு சென்றுள்ள பிள்ளைகள் பத்திரமாக வீடு திரும்பும் வரை பெற்றோர்கள் பீதியுடன் உள்ளனர். தினமும் காலை, மாலை நேரங்களில் போலீசார், போக்குவரத்தை சரி செய்து விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.

News

Read Previous

புகையில்லா பொங்கல் பண்டிகை முதுகுளத்தூரில் ஆலோசனை

Read Next

நான் கண்ட வள்ளல் சீதக்காதி, பி.எஸ்.ஏ.

Leave a Reply

Your email address will not be published.