புகையில்லா பொங்கல் பண்டிகை முதுகுளத்தூரில் ஆலோசனை

Vinkmag ad

முதுகுளத்தூர், : முதுகுளத்தூரில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில், பொங்கல் பண்டிகையை புகையில்லாமல் கொண்டாடுவது குறித்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் நடந்த இக்கூட்டத்திற்கு, பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி தலைமை வகித்தார். இன்ஸ்பெக்டர் மூக்கன், பள்ளி தலைமை ஆசிரியர் முகமது சுலைமான், பேரூராட்சி துணைத்தலைவர் பாசில் அமின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். என்சிசி திட்ட அலுவலர் துரைப்பாண்டியன் வரவேற்றார்.
கூட்டத்தில், போகி, பொங்கலை முன்னிட்டு வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் குப்பைகளை எரிக்காமல், குப்பை தொட்டியில் போட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
வர்த்தக சங்க தலைவர் கருப்பசாமி, பொருளாளர் முத்துராமலிங்கம், கவுன்சிலர் சீனிமுகமது, கல்லூரி பேராசிரியர் சண்முகநாதன், பள்ளிவாசல் ஜமாத் தலைவர் காதர்முகைதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News

Read Previous

மாற்று சக்தி முயற்சியா, சக்தி பேணலா?

Read Next

ரோட்டில் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால்…நெருக்கடி… போக்குவரத்தில் திணறும் கீழக்கரை, முதுகுளத்தூர்

Leave a Reply

Your email address will not be published.