இரவு நேர விரைவு பஸ் ரத்துமுதுகுளத்தூரில் மக்கள் அவதி

Vinkmag ad

முதுகுளத்தூர்: முதுகுளத்தூரிலிருந்து மதுரைக்கு இரவு நேரத்தில் இயக்கபட்ட, “ஒன் டூ த்ரீ’ அரசு பஸ் சேவை, ரத்து செய்யப்பட்டதால், மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

தினமும் காலை 10, மாலை 4, இரவு 10 மணி என, முதுகுளத்தூரிலிருந்து மதுரைக்கு, “ஒன் டூ த்ரீ’ அரசு பஸ் இயக்கபட்டது. இரவு 10 மணிக்கு இயக்கப்பட்ட பஸ்சை நம்பி முதுகுளத்தூர், கடலாடி பகுதி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மதுரைக்கு சென்று வியாபாரத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி வந்தனர். சில நாட்களாக, எவ்வித அறிவிப்புமின்றி இரவு நேரத்தில் இயக்கப்பட்டு வந்த இந்த “ஒன் டூ த்ரீ’ ரத்து செய்யபட்டது.

 

இதனால், வியாபார நோக்கத்திற்காக செல்லும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.வியாபாரி, சேகர் கூறுகையில், “” இரவு நேரங்களில் மதுரைக்கு சென்று, பழங்கள், காய்கறிகள், மளிகை பொருட்கள் உட்பட, வியாபாரத்திற்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கி, மறுநாள் அதிகாலையில் வீடு திரும்புவது வழக்கம். இரவு நேர பஸ் ரத்தானதால் பஸ் மாறி செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், கால விரயம் மற்றும் பண விரயம் ஏற்பட்டுள்ளது. வியாபாரிகளின் நலன் கருதி மீண்டும் இரவு நேரத்தில் “ஒன் டூ த்ரீ பஸ்’ இயக்க வேண்டும்”, என்றார்.

 

போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூறுகையில், “” பதட்ட சூழ்நிலை கருதி, போலீசார் அறிவுறுத்தலின்படி, இரவு நேர பஸ் சேவை ரத்து செய்யப்பட்டது. தற்போது, மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்”, எ

News

Read Previous

அஜ்மானில் முதுவை சங்கமம் 2013 குறித்த கலந்துரையாடல்

Read Next

ரூ.33.43 கோடியில் பாதாள சாக்கடை

Leave a Reply

Your email address will not be published.