ஈகை இன்பம்

Vinkmag ad

ஈகை இன்பம்  (கவிஞர் கே.பி. சாகுல் ஹமீது)

 

சமயவழி நின்று 

தமிழ்வளர்க்கும்

பண்பாடு கொண்ட

தமிழ்ப் பேசும் உடன் 

பிறப்புக்களே!…

கவியமுதம் பருகக்

காத்திருக்கும்

புவி போற்றும் புலவர்களே!….

பூப்போல 

பொன்போலநல்ல

பாப்போல 

பாங்குடைய

புத்தகம்போல  

சீனிப்பாகாய்

சக்கரைப் 

பொங்கலாய்

நினைத்தாலே

நெஞ்சமெல்லாம்

இனிக்கும்

என்உயிரே

தமிழே!..

உன்னைப் போற்றி

என் இறைவனை

வணங்கி 

ஆரம்பம் செய்கிறேன்.

 

என் தலைப்பு

ஈகை இன்பம்

எடுத்து உரைக்கின்றேன் 

செவி மடுத்துக்

கேட்டுடுவீரே!

 

இறைவன்

கட்டளையே

இறைமறை

என்னும்

திருக்குரான்.

நபிகளார் மூலம்

மண்பதைக்கு

கிடைத்த

மாபெரும் 

பொக்கிஷம்!

 

ஆண்டாண்டு

காலம் ஈருலகிலும்

மாண்புடன்வாழச்                                 (Page 1 of 5)

சொல்லும்

சரியான 

சட்டப்புத்தகமது!.

காலக் கரையான்

அரித்தலும்

ஆழிப்பேரலையே

அடித்துச் 

சென்றாலும்

“ஹாபீஸ்” களின்

நெஞ்சில் 

இறுதினாள் வரை

ஜீவநதியாய்

ஜீவித்திருக்கும்

அமுதசுரபிப்

பாத்திரமல்லவா

அத்திருமறை?.

 

என்னா இல்லை 

அதில்?.

எதற்கும் உண்டே

அதில் பதில்!

 

இரக்கம் தானே

ஈகையின்

ஆணிவேர்?.

அதை ஆணி

அடித்ததுபோல்

சட்டமாகச்

சொன்னது

இறைவனின்

திருமறைதானே?

 

உண்மை……..

இரக்கம்

கருணைக்கு

விளக்கம்!.

ஈகை

நல்லவர்

பழக்கம்!. –அதை

வழக்கப் படுத்தி

வாழ்வாங்கு

வாழச் சொல்வதுதானே

வான்மறை 

சொல்லும்

ஈகை?                                                           (Page 2 of 5)

அதைப்

பின்பற்றி

வாழ்ந்தால்

கிடைத்திடுமே

என்றும் பேர் 

உவகை

 

ஈகைதனைத்

தன் சுற்றத்தாரில்

நலிந்தவருக்கும்

ஏனைய மற்றவருக்கும்

அன்பு  இரக்கம்  கொண்டு

அள்ளித்

தருவதுதானே

ஈகை?

 

பொருளால்

நலிந்தவரையும்

மெலிந்தவரையும்

மேலே தூக்கி 

விடுவதுதானே

ஈகை?.

 

இது பொருளாதாரச்

சமன் பாட்டுக் கோடு!

அதற்கில்லை

என்றும் ஈடு!!.

 

அது….உருக்கும்

வறுமையை

விரட்டும்!.

கொடுப்போர்

செல்வத்தையும்

பெருக்கும்!!.

 

பள்ளம்

மேடாகும்!

இல்லாமை

இல்லாமல் 

போகும்!!.

 

தனிஉடமை

தகர்ந்து

பொது உடமை

மலரும்!.

 

இது உயர் குணம் 

கொண்டவர்களின்

கட்டாயக் கடமை அல்லவா?                                                              (Page 3 of 5)

அதை வழக்கப்

படுத்தி

வாழ்வதுதானே

பேரின்ன்ப வாழ்க்கை?

 

கொடுப்பதினால்

என்றும்

குறைவதில்லை.

ஆனால் இன்று

கொடுப்பார் தான்

குறைந்தே போனார்!.

 

வறியார்க் கொன்று

ஈவதே ஈகை.

மற்றெல்லாம்

எதிர்பார்ப்பின்

மோசப் பின்புலமே!.

 

ஈதல் இசைபட

வாழ்தலே வாழ்க்கை!

இருந்தும் ஈயாதிருந்தால்

நாம் வெறும் யாக்கை!.

 

கண்ணாகக்

காக்கின்ற

செல்வம்

ஒருநாள்

உன்னைக்

காக்காமலே போகும்!              

ஆனால் நீசெய்த  ஈகை 

நாளை தரும் சொர்க்கம்!.

இதுதான் என்றும் 

விழுமிய மார்க்கம்!.

 

வாடி  நின்றவர்க்கெல்லாம்

நாடிச் சென்று 

தனக்குப் போக

தேடிய செல்வத்தை

வாரிக்கொடுப்பதுதானே

ஈகையின் இலக்கணம்?.

 

செல்வத்தைப் புதைக்கும்

செயல் பாவமே!.

ஈகை சொர்க்க 

வாசலுக்கப் பாலமே!

 

ஆகையால்…

ஈத்துவந்து

நாமும் மகிழ்ந்து     (Page 4 of 5)

மற்றவரையும்

மகிழச் செய்யும்

இன்பம் கண்டு

ஈருலகிலும்

வாழ்வாங்கு வாழ்வோமே!                                                        

 

வாய்ப் பளித்தமைக்கு நன்றி கூறி முடிக்கின்றேன். நன்றி, வணக்கம்!.

              (By   Haji Janab K. P. Shahul Hameed B.Sc., M.A., B.L., Chennai -15.)

 

News

Read Previous

யாதுமாகி நின்றாய் வாசிப்பே !

Read Next

வாக்காளர்களை ஏமாற்றும் தேர்தல் முறை

Leave a Reply

Your email address will not be published.