கேள்வி மற்றும் கலைஞரின் Thug Life பதில்கள்

Vinkmag ad

கேள்வி மற்றும் கலைஞரின் Thug Life பதில்கள்

கேள்வி: “அம்மையார் ஜெயலலிதா சென்னையில் அமர்ந்துகொண்டே காணொலிக் காட்சி மூலம் தமிழகமெங்கும் கட்டடங்களைத் திறந்து வைக்கிறாரே?”

பதில் : ஸ்ரீரங்கத்தில் இருந்துகொண்டு சொர்க்கவாசலைத் திறந்துவிட்டோம் என்கிறார்களே… அதுபோல நினைத்துக்கொள்ள வேண்டியதுதான்!

கேள்வி: “சட்டமன்றப் பேச்சுக்கும் பொதுக்கூட்டப் பேச்சுக்கும் என்ன வித்தியாசம்?’’

பதில் :
மனக்கணக்குக்கும் வீட்டுக்கணக்குக்கும் உள்ள வித்தியாசம்.

கேள்வி: “செவ்வாயில் தண்ணீர் இருப்பதாக விஞ்ஞானிகள் சொல்கிறார்களே?”

பதில்: செவ்வாயில் இருந்தால் அது உமிழ்நீர். தண்ணீர் அல்ல.”

கேள்வி : “விவாதம்-வாக்குவாதம்-விதண்டாவாதம் மூன்றும் எப்படி இருக்க வேண்டும்?”

பதில் : விவாதம்-உண்மையாக இருக்க வேண்டும். வாக்குவாதம்-சூடு இருந்தாலும், சுவையாக இருக்க வேண்டும். விதண்டாவாதம்-தவிர்க்கப்பட்டாக வேண்டும்.

கேள்வி: “கோழி முதலா, முட்டை முதலா?”

பதில் : முட்டை வியாபாரிகளுக்கு முட்டையும், கோழி வியாபாரிகளுக்கு கோழியும்தான் முதல்.

கேள்வி: இளம் மாணவர்கள் அரசியலில் ஈடுபடலாமா?

பதில் : இளம் வயதில் அரசியல் என்பது அத்தைப்பெண் போல. பேசலாம், பழகலாம். சுற்றிச் சுற்றி வரலாம். ஆனால், தொட்டு மட்டும் விடக்கூடாது!

கேள்வி: தலையில் முடி கொட்டியது குறித்து எப்போதாவது வருந்தியிருக்கிறீர்கள ?

பதில்: இல்லை. அடிக்கடி முடிவெட்டிக்கொள்ளுவதற்கு ஆகும் செலவு மிச்சமென்று மகிழ்ந்துதான் இருக்கிறேன்.”

News

Read Previous

கல்லறையில் துயிலும் கள்ளிப் பூக்கள்

Read Next

முதுவையில் திருமண நிகழ்ச்சி

Leave a Reply

Your email address will not be published.