1. Home
  2. கேள்வி

Tag: கேள்வி

கிண்ணிமங்கலம் கல்வெட்டுகளும் சில கேள்விகளும்

source – https://www.facebook.com/marudhu.pandiyan.79/posts/3812694222181130 Marudhu Pandiyan [Curator of Government Museum in Madurai] மீண்டு வந்த வேங்கையின் எழுச்சி கட்டுரை கிண்ணிமங்கலம் கல்வெட்டுகளும் சில கேள்விகளும் சொ.சாந்தலிங்கம், மதுரை அண்மையில் மதுரை மாவட்டம் செக்கானூரணிக்கு அருகில் கிண்ணிமங்கலம் கிராமத்தில் தமிழி (தமிழ்-பிராமி) கல்வெட்டு ஒன்றும் அத்தோடு வட்டெழுத்துக் கல்வெட்டு…

மோடி அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

மோடி அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி   தில்லியை முற்றுகையிட்டு லட்சோப லட்சம் விவசாயிகள் 45 நாட்களுக்கும் மேலாக தீரமிக்க போராட்டத்தை நடத்திவரும் நிலையில், வேளாண் சட்டங்களை அரசு ரத்து செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. நீங்கள் ரத்து செய்கிறீர்களா? அல்லது நாங்கள் உத்தரவுபிறப்பித்து ரத்து செய்யவா என்று கடும் எச்சரிக்கையையும் மத்திய அரசுக்கு  உச்சநீதிமன்றம்…

சுஜாதா கேள்வி பதில்..!!

சுஜாதா கேள்வி பதில்..!!   அம்பலம் இணைய இதழில் சுஜாதா எழுதிய  கேள்வி பதில்கள்..   கேள்வி:  சுஜாதா சார்! கம்ப்யூட்டர் கம்ப்யூட்டர் என்று பேசுகிறீர்களே… கொஞ்சம் சாப்பாட்டைப் பற்றிப் பேசலாமே. உங்கள் கணிப்பொறி நிறுவனத்தில் கேன்டீன் எப்படி? – பதில்:  கணிப்பொறி, கேன்டீன் இரண்டிற்கும் அடிக்கடி ஒரே பிரச்சினை தான் : ‘‘சர்வர் ப்ராப்ளம்’’.…

கேள்வி மற்றும் கலைஞரின் Thug Life பதில்கள்

கேள்வி மற்றும் கலைஞரின் Thug Life பதில்கள் கேள்வி: “அம்மையார் ஜெயலலிதா சென்னையில் அமர்ந்துகொண்டே காணொலிக் காட்சி மூலம் தமிழகமெங்கும் கட்டடங்களைத் திறந்து வைக்கிறாரே?” பதில் : ஸ்ரீரங்கத்தில் இருந்துகொண்டு சொர்க்கவாசலைத் திறந்துவிட்டோம் என்கிறார்களே… அதுபோல நினைத்துக்கொள்ள வேண்டியதுதான்! கேள்வி: “சட்டமன்றப் பேச்சுக்கும் பொதுக்கூட்டப் பேச்சுக்கும் என்ன வித்தியாசம்?’’…

“தற்சார்பு இந்தியா” என சொல்வது நாடகமா? .. தில்லி உயர் நீதிமன்றம் கேள்வி

“தற்சார்பு இந்தியா” என சொல்வது நாடகமா? .. தில்லி உயர் நீதிமன்றம் கேள்வி   விமான நிலையங்கள் தொடர்பான ஏலத்தில் பங்கேற்கும் நிறுவனங்களின் தகுதியை (Eligibility Criteria) மாற்றி அமைத்திருக்கும் விஷயத்தில், மத்திய அரசின் செயல் அதிருப்தி அளிப்பதாகவும்; மேக் இன் இந்தியா, தற்சார்பு இந்தியா முழக்கங்கள் பாசாங்குத்தனமானதா என்ற சந்தேகத்தை வரவழைப்பதாகவும் தில்லி உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. விமான நிலைய பராமரிப்புப் பணி தொடர்பான ஏலத்தில் பங்கேற்கும் நிறுவனங்களுக்கான தகுதியை, திடீரென மத்திய அரசு மாற்றியமைத்தது. அதாவது, சரக்குகள் கையாளுதல், விமானங்களை சுத்தம் செய்தல் உள்ளிட்ட சேவைகளுக்கான இந்த ஏலத்தில், ஆண்டுக்கு ரூ.35 கோடி விற்றுமுதல் இருக்கும் நிறுவனங்கள்தான் பங்கேற்க முடியும் என புதிய விதியைக் கொண்டு வந்தது.இதற்கு எதிராக மத்திய விமானக் கொள்கை, பாதுகாப்பு மற்றும் ஆய்வு (Centre for Aviation Policy,Safety and Research – CAPSR)அமைப்பு, தில்லி உயர் நீதிமன்றத் தில் அண்மையில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கில்தான், நீதிபதிகள்விபின் சாங்கி, ரஜனிஷ் பட்நாகர் ஆகியோர் மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளனர். மத்திய அரசின் நிலைப்பாடு எங்களுக்கு வேதனை அளிக்கிறது. ஒருபுறம் மேக் இன் இந்தியா, தற்சார்பு இந்தியா என்று பிரச்சாரம் செய்கிறார்கள். மறுபுறம், விமான நிலையசேவைக்கான டெண்டரில் சிறு நிறுவனங்களைத் துரத்தி விடும் வகையில் விதிகளை மாற்றுகிறார்கள்.மத்திய அரசும், இந்திய விமான நிலையங்கள் ஆணையமும் சிறு நிறுவனங்களை ஏலத்திலிருந்து வெளியேற்ற விரும்பினால், ‘இதுதான் எங்கள் கொள்கை’ என்று வெளிப்படையாக துணிச்சலாக கூறுங்கள். அரசியல் தலைமைப் பதவியில்உள்ளவர்கள் ‘மேக் இன் இந்தியா’,‘தற்சார்பு இந்தியா’ பற்றிப் பேசுகிறார்கள். உள்நாட்டு தொழில்களைவளர்க்க வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால், விமான நிலையங்கள் ஆணையத்தின் செயல்பாடு அவர்களின் வார்த்தைக்குப் பொருத்தமாக இல்லை. முழுவதும் பாசாங்குத்தனமாகவே (Hypocritical) இருக்கிறது. இதுபோன்று சிறிய நிறுவனங்களை வெளியேற்றும் விதத்தில் நடந்துகொண்டால், எதற்காக, ‘மேக் இன் இந்தியா’ பற்றி அரசியல்தலைவர்கள் பேசுகிறார்கள்? இந்தியாவில்தான் தயாரிக்க வேண்டும் என்று கூறுகிறோம், இந்தியாவுக்காகச் சேவை செய்ய வேண்டும், தற்சார்பு பொருளாதாரமாக மாற வேண்டும் என பேசுகிறோம். இந்த நாட்டிலிருந்து இறக்குமதி செய்வதை நிறுத்துங்கள் என்று கூறுகிறோம். மறுபுறம் நம்முடைய சொந்த நாட்டைச் சேர்ந்த தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்துவதில் தோல்வி அடைந்து விடுகிறோம்.நம் மண்ணைச் சேர்ந்த சொந்த தொழில் முனைவோரை ஊக்குவிப்பதில் நாடு அலட்சியமாகவும் உணர்ச்சியற்றதாகவும் இருந்ததன் காரணமாக, இந்நாட்டில் உற்பத்தி செய்வதும் அல்லது தொழில் நடத்துவதும் கடினம் என்று கூறி பலர் வெளியேறி விட்டனர். “சிறிய நிறுவனங்கள் வளர்வதற்கு அனுமதிக்காவிட்டால், சந்தையில் பெரு நிறுவனங்களின் ஆதிக்கம் மட்டுமே இருக்கும், அரசுக்கே அவர்கள் ஒரு கட்டத்தில்கட்டளையிடுவார்கள்” என்று நீதிபதிகள் சாட்டையைச் சுழற்றியுள்ளனர்.நிறுவனங்கள் ஏலத்தில் பங்கேற்பதற்கான தகுதி குறித்த விஷயத்தில், மத்திய அரசும், இந்திய விமான ஆணையமும் தங்களின் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண் டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.  

கேள்வியும் நானே பதிலும் நானே

கேள்வியும் நானே பதிலும் நானே ===========================================ருத்ரா கடவுள் உண்டா?இல்லையா? இருந்தால் ஆணா? பெண்ணா? ஆண் என்றால் சிவனா?விஷ்ணுவா? பெண் என்றால் பார்வதியா?லட்சுமியா? அஃறிணை என்றால் உயிருள்ளதா? உயிரற்றதா? உயிரற்றதென்றால் அதுவா? இதுவா? கடவுளுக்கு மதம் உண்டா? இல்லையா? இருந்தால் எந்த மதம்? இல்லாவிட்டால் ஏன் இல்லை? அவர் நாத்திகரா?…

கேன்சர்

சிறு வயதில் நாம் சினிமாவில் கேள்விபட்ட நோய் – கேன்சர். இன்று, சுகர் பிரஷர் போல கேன்சரும் கடும் வேகத்தில் மக்களிடையே பரவிக்கொண்டு இருக்கிறது…!! நீர், நிலம், காற்று, ஆகாயம் என எல்லாவற்றையும் மனிதன் மாசு படுத்தியதன் எதிர்வினை இது.! இன்னும் மேலும் மேலும் மத்திய மாநில அரசுகள்…

ஜெயகாந்தனிடம் 10 கேள்விகள்

12-7-1964, விகடனில் முதுபெரும் எழுத்தாளர் ஜெயகாந்தன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். ஜெயகாந்தனிடம் 10 கேள்விகள் – பொக்கிஷ பகிர்வு.. 1.எழுத்துத் துறைக்கு நீங்கள் எப்படி வந்தீர்கள்? நான் வரவில்லை, எங்கோ போய்க் கொண்டிருந்த வழியில், எழுத்தாளனாய் வரவேற்கப்பட்டேன். நான் கதைகள் எழுதிப் பத்திரிகைகளுக்கு அனுப்பியதில்லை. என்னைப்…

2005க்கு முந்தைய ரூபாய் நோட்டுகள்: கேள்விகளும், பதில்கள்

கள்ள நோட்டு புழக்கத்தை குறைக்கும் நோக்கோடு, 2005ம் ஆண்டிற்கு முன் அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை, புழக்கத்தில் இருந்து விலக்க, ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.பழைய நோட்டுகள்: இதற்காக, ‘பழைய நோட்டுகளை, மக்கள், வரும் ஜூன் 30ம் தேதி வரை மாற்றிக் கொள்ளலாம்’ என, ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு,…

தமிழ் விக்கி்ப்பீடியா – கேள்விகள் – விடைகள்

https://www.facebook.com/JegadeeswaranNatarajan/posts/4673377492595 — ஜெகதீஸ்வரன் தமிழ் விக்கி்ப்பீடியாவின் பத்தாண்டு கொண்டாட்டம் – தமிழ் விக்கிப்பீடியாவை என் நண்பர்களுக்கு சேர்த்ததைவிட நான் விக்கியில் பங்களிப்பவன் என்ற எண்ணத்தையே அதிகம் கொண்டு சேர்த்திருக்கிறது. சில உறவினர்களும் அறிந்திருக்கின்றார்கள். அதனால் தொடர்ந்த பல்வேறு கேள்விகளை நான் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. உங்களுக்கும் கூட இந்தக் கேள்விகள்…