தமிழ் விக்கி்ப்பீடியா – கேள்விகள் – விடைகள்

Vinkmag ad

https://www.facebook.com/JegadeeswaranNatarajan/posts/4673377492595

— ஜெகதீஸ்வரன்

தமிழ் விக்கி்ப்பீடியாவின் பத்தாண்டு கொண்டாட்டம் – தமிழ்
விக்கிப்பீடியாவை என் நண்பர்களுக்கு சேர்த்ததைவிட நான் விக்கியில்
பங்களிப்பவன் என்ற எண்ணத்தையே அதிகம் கொண்டு சேர்த்திருக்கிறது. சில
உறவினர்களும் அறிந்திருக்கின்றார்கள். அதனால் தொடர்ந்த பல்வேறு கேள்விகளை
நான் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. உங்களுக்கும் கூட இந்தக் கேள்விகள்
மனதில் தோன்றியிருப்பினும் கேட்க தயக்கம் கொண்டு விட்டிருக்க
வாய்ப்பிருக்கிறது என்பதால் இங்கு கேள்விகளையும் அதற்கான விடைகளையும்
பகிர்ந்து கொள்கிறேன்.

1) விக்கிப்பீடியாவில் நீ வேலை செய்கின்றாயா? எவ்வளவு சம்பளம்? எந்தப்
பொறுப்பில் இருக்கிறாய்?

விக்கி என்பது ஒரு இணையத்தளத்துக்கு வரும் பார்வையாளர்களே அத்தளத்தின்
உள்ளடக்கத்தை திருத்தவோ கூட்டவோ குறைக்கவோ தக்க வகையில் அமைந்திருக்கும்
இணையத்தளத்தை குறிக்கும். அதன் ஒரு பகுதியாக கலைக்களஞ்சியமாக இருப்பது
விக்கிப்பீடியா. இதில் கட்டுரைகளை எழுத யாருக்கும் சம்பளம் தந்து
வேலைக்கு வைப்பதில்லை.

தங்களுடைய ஆர்வத்தின் காரணமாக இதில் இலட்சக்கணக்கானவர்கள்
பங்களிக்கின்றார்கள். அதில் நானும் ஒருவன்.

2) விக்கிப்பீடியால் எழுதுவதால் என்ன நன்மை கிடைக்கும்?

விக்கிப்பீடியாவில் எழுதுவதால் சம்பளம் கிடைக்கப்போவதில்லை என்றாலும்,
நமக்கான அங்கிகாரம் கிடைக்கும். நாம் தொடங்குகின்ற கட்டுரைகள் நம்முடைய
கண்ககிலிருந்து தொடங்கப்பட்டவைகளாக விக்கிப்பீடியாவில் சேமித்து
வைக்கப்பட்டிருக்கும். இதன் மூலம் 1000, 2000 கட்டுரைகளை தொடங்கியதை
பிறகு அறிந்துகொள்ளலாம். அத்துடன் நம்முடைய ஒவ்வொரு செயல்களையும்
நம்முடைய பயனின் பெயரிட்டு விக்கிப்பீடியாவின் ஒவ்வொரு பக்கத்திலும்
சேமித்து வைக்கப்பட்டிருக்கும். விக்கிப்பீடியா இருக்கும் வரை நம்முடைய
பங்களிப்பும் இருக்கும்.

3) விக்கிப்பீடியாவின் தலைமை நிர்வாகி யார்?
விக்கிப்பீடியாவில் நிர்வாகி முதலாளி என தனியொருவர் இல்லை. இங்கு
இயற்றப்படும் சட்டங்களும், வழிமுறைகளும் படிப்பவர்களை முன்நிறுத்தி
எடுக்கப்பட்ட சீரிய நடைமுறை செயல்களாகும். நோக்கத்தினை முன்நிறுத்தி
விக்கிப்பீடியாவில் கொள்கைகள் வரையரை செய்யப்பட்டுள்ளன.

எளிய தமிழில், தரமான, கட்டற்ற கலைக்களஞ்சியத்தை தருவதே தமிழ்
விக்கி்பபீடியாவின் நோக்கமாகும்.

4) விக்கிப்பீடியாவில் நான் ஏன் எழுதவேண்டும்?

இன்று நாம் பெற்றிருக்கும் அறிவானது நம்முடையதல்ல, தன்னலமற்ற பலருடைய
கருத்துகள் நம்மை அறிவாளியாக ஆக்கியிருக்கின்றன. திருக்குறள், ஆத்திசூடி
போன்றவற்றை எழுதியவர்களின் உண்மைப் பெயரைக்கூட அறிய இயலவில்லை. சிலரோ
புனைப்பெயரை விட்டு சென்றிருக்கிறார்கள். இப்படி தங்களைப் பற்றிய
ஆர்வமற்று அடுத்த தலைமுறைக்கு நீங்களும் உஙகள் அறிவினை தருதல்தானே
சிறப்பு.

4) கலைக்களஞ்சியம் தவிற விக்கியில் வேறு உண்டா?

விக்கியின் ஒரு பகுதியே விக்கிப்பீடியா. இதுபோல எண்ணற்ற திட்டங்கள்
விக்கியில் இருக்கின்றன.

உதாரணத்திற்கு

விக்சனரி
விக்கிமூலம்
Commons பொதுவகம்
விக்கிநூல்கள்

6) எனக்கு எழுதுவதில் ஆர்வம் இல்லை. நான் விக்கிப்பீடியாவிற்காக என்ன செய்யலாம்?
பொதுவகம் எனப்படும் விக்கியின் ஒரு திட்டம் புகைப்படங்களில்
ஆர்வமுள்ளோர்களுக்கானது. உங்களுக்கு புகைப்படம் எடுப்பதில் ஆர்வம்
இருப்பின் அவற்றை இந்த உலகிற்கு இலவசமாக தரலாம். உ்ங்களுடையப் படைப்புகளை
அனைவரும் பயன்படுத்துவர்.

7) எனக்கு அறிவியலை, என்னுடைய துறையை பற்றி தமிழில் நூல் எழுத ஆசை?ஆனால்
பணமில்லை. அதனை மக்கள் அனைவருக்கும் தர விரும்புகிறேன்?. இது
விக்கிப்பீடியாவில் சாத்தியமாகுமா?

உங்களுக்காக இருப்பதுதான் விக்கிநூல்கள். இப்பகுதியில் உங்களுக்கான
நூல்களை எழுத முடியும். இதற்கு பணம் கொடுக்க வேண்டியதி்லலை. அச்சிட
வேண்டியதில்லை. ஆனால் மக்கள் அனைவருக்கும் நீங்கள் எழுத விரும்பும்
உங்கள் துறைசார்ந்து, விருப்பம் சார்ந்த நூல்கள் சென்று சேறும்.

எனக்கு புகைப்படம் எடுப்பதில் ஆர்வம். நிறைய கோயில்கள்,
விலங்குகள், சடங்குகள் பற்றிய படங்களை சேகரித்து வைத்திருக்கிறேன். இதை
விக்கிப்பீடியாவில் இடலாமா?

விக்கிப்பீடியாவில் உங்களுடையப் புகைப்படங்களை தேவையான கட்டுரைகளில் இட
இயலும். குறிப்பாக கோயில், சடங்குகள் பற்றிய புகைப்படங்கள்
தமிழ்விக்கி்பீடியாவில் குறைவாகவே உள்ளன. உங்களுக்கு அருகே உள்ள
கோயில்கள் புகைப்படங்களை எடுத்து அவற்றை உரிய கோயில்கள் கட்டுரைகளில்
சேர்க்க இயலும்.

9) விக்கிப்பீடியா போன்ற ஒன்றை நானே உருவாக்கி கொள்ள முடியாதா?

தொடக்கத்தில் என்னுடைய வலைப்பூவான சகோதரன் என்பதை வலைதளமாக மாற்ற
எண்ணினேன். அதற்கென ஒரு URLஐ வாங்கி வருடந்தோறும் பராமரிப்பு செய்ய
வேண்டும். ஒரு வருடம் தவறவிட்டாலும் URL கிடைக்காமல் போய்விடும். அடுத்து
தகவல்களை சேமிப்பதற்கான இடம், இதற்கு அளவுக்கு தக்கது போல பணம் கொடுத்து
அதையும் வருடந்தோறும் பராமரிக்க வேண்டும். பிறகு நாமே கட்டுரை எழுதி,
நாமே புகைப்படங்Kளை இணைத்து நாமே பிழைகளையும் திருத்த வேண்டும்.
துடிப்புள்ள வரை செய்யலாம் என்றாலும் அதன் பிறகு இணையத்திலிருந்து என்
பங்களிப்புகள் மொத்தமாக அகன்றுவிடும். அதனால் இலவசமான கலைக்களஞ்சியம்
விக்கிப்பீடியாவை நான் தேர்ந்தெடுத்துக் கொண்டேன்.

10) விக்கிப்பீடியாவால் உன்னுடைய வாழ்க்கை உயர்ந்திருக்கின்றதா?

என்னுடைய வாழ்க்கையை பொருளாதாரம் மற்றும் சமூகம் என்ற இரு வகைகளாக
பிரித்து காண்கிறேன். இதில் சமூகம் மிகவும் முக்கியமானது, என்னுடைய
உள்மனதிற்குள் சமூக உந்துதல்கள் இருந்தும் அதனை நான் புறக்கணித்தே
வந்துள்ளேன். என்னால் அரசியல்வாதியாக முடியாது, சாமியாராகி சமய
பிரட்சாரத்திலும் ஈடுபடுதல் என்பதில் உறுதியாக இருந்தேன். தெரிந்தை
கூறுவோம், தெரியாதை அறிந்து கொள்வோம் என்று தொடங்கிய இணைய வாழ்க்கையில்
எதிர்பாரா விதமாக விக்கிப்பீடியா கிடைத்தது. இதில் பங்காற்ற தொடங்கிய
பொழுது என்னுடைய ஆர்வம் சமயத்தினை நோக்கி இருப்பதை அறிந்தேன். பிறகு
படிப்படியாக சிறிய சிறிய இலக்குகளை சமயத்தினை நோக்கி எடுத்து வைத்து
முன்னேறிக்கொண்டிருக்கிறேன். மனதிற்கு இதமளிக்கும் பணி.

பொருளாதாரம் குறித்து நான் அதிகம் அக்கரை கொண்டதில்லை. முவ்வுணவு, ஈருடை,
ஓரிடம் என்பதே மனித வாழ்விற்கு போதுமானது என்று நம்புகிறவன் நான்.
விக்கிப்பீடியின் பத்தாண்டு கொண்டாத்தில் நான் புதியதாக ஒன்றைக் கற்றுக்
கொண்டேன். அது மனித வாழ்வோடு இணைந்த சமூகத்திற்கு நம்மால் செய்யக்கூடிய
பொருளாதார கடமைகள். இதை உணர்ந்த நாளிலிருந்து நான்
விழிப்படைந்திருக்கிறேன். இந்து விழிப்புணர்வு பொருளாதாரத்தின்
அடி்பபடையிலும் என்னை மேம்படுத்தும் என்று நம்புகிறேன்.

உங்Kளிடம் ஏதேனும் கேள்விகள் இருந்தாலும் கூறுங்கள். விக்கிப்பீடியா
பற்றி அறிந்ததை பகிர்ந்து கொள்கிறேன்.

News

Read Previous

எம்.ரிஷான் ஷெரீப் கவிதைகள்

Read Next

அலோபதி சர்க்கரை வணிகம் ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *