1. Home
  2. வித்யாசாகர்

Tag: வித்யாசாகர்

ஒரு தீப்பிழம்பென மீண்டெழுவோம் வா !

ஒரு தீப்பிழம்பென மீண்டெழுவோம் வா – வித்யாசாகர், குவைத்   தீப்பிழம்பென மீண்டெழுவோம் வா… ஒவ்வொரு விதைக்குள்ளும் ஒரு காடிருக்கும் என்பார்கள் ஒவ்வொரு மனிதர்க்குள்ளும் ஒரு தலைமுறை இருக்கிறது; இங்கே மடிவது மனிதர்களல்ல இம்மண்ணின் விதைகள், கவலை விடு, நம்பிக்கைக் கொள் பிணங்களுக்கு பூச்செண்டு யென்னும் அவச்சொல் அழி,…

வயது கூடினாலும் வெள்ளி முகிழ்த்தாலும்

வயது கூடினாலும் வெள்ளி முகிழ்த்தாலும் (கவிதை) வித்யாசாகர்!   1 ஒரு நிலா செய்து தெருவில் உருட்டிவிடவும், நட்சத்திரங்களை பொருக்கி சட்டைப்பையில் கொட்டிக்கொள்ளவும், பூமியைச் சுருட்டி வீட்டுக் கதவு மூலையில் வைத்துவிடவும், வானத்து முதுகில் ஒரு பெயரெழுதி வைக்கவும், கடலுக்குள் கைவிட்டு ஒரு முத்தெடுத்து உனக்கு மூக்குத்தி மாட்டிவிடவும்,…

ஆயிரம் பூக்களால் அர்ச்சிப்பவள் நீ

ஆயிரம் பூக்களால் அர்ச்சிப்பவள் நீ – காதல் கவிதை – வித்யாசாகர்!   உயிரானாய் உயிராகவே இருப்பாய் உயிருள் உயிர்மை ஊட்டுபவளே உயிருள்ளவரை உடனிரு. ஒரு அலைபோல மீண்டும் மீண்டும் ஓயாது வருபவள் நீ அந்த அலை அந்தக் கடலிலிருந்து மெல்ல விலகினால் அந்தக் கடலென்ன ஆகும்? நானென்ன…

அப்பா எனும் ஆயிரஞ் சிரிப்பு

  அப்பா எனும் ஆயிரஞ் சிரிப்பு – வித்யாசாகர் – கவிதை!   அடித்தாலும் திட்டினாலும் முண்டம் முண்டமென மண்டையில் குட்டினாலும் அப்பா வீட்டிலிருக்கும் நாட்கள் தான் எங்களுக்கு வசந்தமான நாட்கள்.. அப்பா கையில் அடி வாங்குவது அவ்வப்பொழுது இறந்து பிறப்பதற்கு சமம்.. நம்மை புதிதாகப் பெற்றெடுக்க அனுதினமும்…

நல்லதோர் வீணை செய்தே

நல்லதோர் வீணை செய்தே (தன்னம்பிக்கை கட்டுரை) வித்யாசாகர்! நல்லதோர் வீணை செய்தே… இந்த உலகமே இடிந்து மேலே விழும் செத்துப்போவோம் என்றாலும் சாகும்வரைப் போராடி தன்னைக் காத்துக்கொள்ளுமொரு துணிவு இந்த உயிரென்னும் கண்ணிற்குத் தெரியாத காற்றுப்பொருளிற்கு உண்டு. உடலெங்கும் நீரால் வாழும் வலிமையும், காற்றைக் கொண்டு பறக்கும் திறமையும், இவ்வுலகை ஒரு கைப்பேசிக்குள் அடக்கிய அறிவையும் கொண்டவர்கள் நாமெல்லோரும். பிறகெதற்கு இங்கே வாழ்வதற்கு பயம் ?…

பெண்களின் காதல் ரகசியம்

பெண்களின் காதல் ரகசியம் (கவிதை) வித்யாசாகர்!! மனம் வலிக்குமென்றெல்லாம் அவளுக்கு கவலையில்லை, பிரிவை பொழுதின் மாறுதலாக எடுத்துக் கொள்பவள் அவள், சட்டை மாற்றும் போது காதலும் மாறிப்போகுமா தெரியவில்லை அவளொரு காதல் தெரியாதவள் என்னை ஏதோ பெரிதென்று எண்ணி நேசித்தவள் அருகில் வந்ததும் லேசாகிவிட்டேன் நான்; காதல் இப்படித்தான் தொடும்வரைதான் மின்சாரம் பாயும் தொட்டப்பின் கொன்றோ விட்டொவிடுகிறது என்றெல்லாம் எழுதுவோரைக் கொஞ்சம் காது திருகி அழைக்கிறேன் வாருங்கள்…

என்றைக்கும் நிலைக்குந் தமிழ்

என்றைக்கும் நிலைக்குந் தமிழ் (கவிதை) வித்யாசாகர்! சொல்லில் நயம் பொருளி லெழில் கண்ணும் காதும் போல; காணவும் கேட்கவும் இனிப்பு மொழி, கண்டவர் கேட்டவர் போற்றும் தனித்த மொழி; தமிழ்! வரலாற்றுக் கொடை வள்ளுவப் பறை தெல்லுதெளிந்த கிள்ளை நடை சொல்லும் பாட்டும் சிறக்கும் மொழி சந்தத் தமிழ்;…

மரத்தை வெட்டாதே மானுடத்தை மாய்க்காதே

மரத்தை வெட்டாதே மானுடத்தை மாய்க்காதே – வித்யாசாகர்! தாய்ப்பால் வாசம் போலவே மரத்தின் பச்சைவாசமும் புனிதம் மிக்கது எனது அண்ணன் தம்பிகள் அக்காத் தம்பிகள் போல அருகாமை மரங்களும் உறவு மிக்கவை மரங்களிடம் பேசுங்களேன் மரங்களும் பேசும் மரங்களின் மொழி மனதின் மொழியாகும் மனதின் மொழி மறந்தோரே மரங்களை…

அம்மாப் பேச்சு

அம்மாப் பேச்சு (வித்யாசாகர்) கவிதை ! சொல்லிலடங்கா சுகமெனக்கு எப்போதுமே அவள்தான், அவளுக்கு மட்டும் தான் அது நானாக மட்டுமே இருக்கிறேன், அவளுக்கு எப்போதுமே நான் அதீதம் தான்; சொல்லைக்கடந்த சுகம் எனக்கு அவளைவிட வேறென்ன? அவளுக்கான சொற்கள் மட்டுந் தான் என் மூச்சு அவளுடைய ஒற்றைப் பெயரை யாசித்து…

நாங்கள், மீண்டும் மனிதர்களாகிவிட்டோம்

நாங்கள், மீண்டும் மனிதர்களாகிவிட்டோம் – வித்யாசாகர் இதோ மீண்டும் அத்தை மாமா பேசுகிறார்கள் தொலைபேசியில் யார் யாரோ அழைத்து நலம் விசாரிக்கிறார்கள், மீண்டும் குருவிகள் கீச்சிடுகின்றன மீண்டும் மழை பெய்கிறது மீண்டும் ஏசியை அணைத்துவிட்டு சன்னலைத் திறந்து உலகத்தை கம்பிகளின் வழியே பார்த்து அமர்ந்திருக்கிறோம், ஊர்குருவிகள் கத்துவதும் குயில் விடிகாலையில் கூவுவதும் இப்போதெல்லாம் காற்றின்…