1. Home
  2. வித்யாசாகர்

Tag: வித்யாசாகர்

உயர்விற்கு வழி

உயர்விற்கு வழி – வித்யாசாகர் – குவைத் இந்த வாழ்க்கை பெரிய வரம்க. இரண்டு கை இரண்டு கால் கண் காது மூக்கு உடம்பு முழுசா இருக்கிறது பெரிய சந்தோசத்தையும் முழு நிறைவையும் பல வளங்களையும் தரக்கூடியது. உண்மையில் நலமா வாழ்வதைவிட ஒரு பெரிய வளமில்லை. உடலில் ஊனமுற்றோர்…

“நானே நானா”

“நானே நானா” ஈழத்துக் கவிஞர் நசீமாவின் புத்தக அணிந்துரை – வித்யாசாகர்! இதோ, அவள் எழுதிடாத அந்நாட்கள்.. இவ்வுலகம் எத்தனையோ மனிதர்களை தலையில் தாங்கிக்கொண்டுதான் இயங்கிக்கொண்டிருக்கிறது. என்றாலும், இந்த பூமிப்பந்தின்மேல் மலரும் எண்ணற்ற பூக்கள் அன்றன்றே உதிர்கின்றன. பல வண்ணத்துப்பூச்சிகள் சிறகின் வண்ணம் சிதறி உடைகிறது. பல வண்ணமயில்கள்…

கனவது விரியட்டும்; தமிழெங்கும் பரவட்டும்..

கனவது விரியட்டும்; தமிழெங்கும் பரவட்டும்..   தட்டுங்கள் திறக்கட்டும், தீப்பொறி பறக்கட்டும் முட்டுங்கள் ஓடட்டும், தமிழரைத் தொட்டால் தீ மூளட்டும், எம்மட்டும் இவ்வாட்டம் யெம் அறம்வென்று அது காட்டும் திமிராட்டம் ஒடுங்கட்டும் ‘எம் தமிழருக்கு இனி விடியட்டும்!   திக்கெட்டும் நாடட்டும் தமிழர் கூடிகூடி வெல்லட்டும் எந்நாடு எம்மக்கள் எல்லாம் ஈரேழுலகமும் பாடட்டும், கடுங்கோபம் பொங்கட்டும்…

தமிழ் ஆள; தமிழ் பேசு..

தமிழ் ஆள; தமிழ் பேசு.. (வித்யாசாகர்) ஜென்ம்ராஜ், ப்ரஷாத், ஹரிஷ், க்ருதிக், கௌரி, சாந்தினி, சௌமியா, சோபியா, மிளன், ராபர்ட், ஆல்வின், நிஷா, அமித், முஸ்தாக், வித்யா, வித்யாசாகர் என பல பெயர்களை நாம் அன்றாடம் காண்கிறோம். ஆனாலும் இதலாம் தமிழ்ச்சொல் அல்ல எனும் ஏக்கம், மறுப்பு, வருத்தமும்…

கைப்பேசியும் களவுபோன நாட்களும்………….

கைப்பேசியும் களவுபோன நாட்களும்.. (வசனக் கவிதை) வித்யாசாகர்! நாட்களை கைப்பேசிக்குள் தொலைக்குமொரு ஆபத்தான கனப்பொழுது, எழுதாத கடிதங்களைப்போல சிந்தாதக் கண்ணீரும் இரத்தநெடியோடு நிரம்பிக்கிடக்கும் வலிநிறைந்த மனசெனக்கு, மருத்துவர்கள் கொலஸ்ட்ரால் சுகர் பிரஷர் விட்டமின்-டி ஆயா தாத்தா பாட்டி என்றெல்லாம் மலிவு சொற்களோடும் மயக்க ஊசியினோடும் திரிந்துக் கொண்டிருக்க, நான்…

நிலவு தெரியும் கடல்..

நிலவு தெரியும் கடல்.. (கவிதை) வித்யாசாகர்! 1) ஒரு மரத்தில் ஆயிரம் இலைகள் முளைப்பதைப்போல மலர்கள் பூப்பதைப்போல் நாமும் இலைகளாய் மலர்களாய் உயிர்திருக்கிறோம்.. நமக்கு வேர் ஒன்று கிளைகளின் வகை ஒன்று இலைகளுள் கிளைகளுள் கனிகளுள் பாயும் நீரோ ரத்தமோ எல்லாம் ஒன்றே; ஒன்றே; உலகம் வெளியில் உள்ள…

பெரும்பேர் கொண்டயென் நாடு.. (கவிதை) வித்யாசாகர்!

பெரும்பேர் கொண்டயென் நாடு.. பச்சை பச்சை காடெங்கும் இச்சை இச்சை ஆண்டைகளே, பழுத்தமரம் ஊரெங்கும் உடம்புண்ணும் பாவிகளே; மெத்து மெத்தாய் பொய்கள்கூறி ஆதிகுடியை யழிக்கிறதே, பட்டுகெட்டும் திருந்தாது பண்டை வளம் ஒழிக்கிறதே.. கொத்தக் கொத்தாய் கொன்றதையும் முத் தமிழால் திட்டிவைத்தோம், எள்ளளவும் பகையில்லை மௌனம் கொண்டே கொள்ளியிட்டோம்.. சட்டம்…

வானத்திற்கு கீழே நிலவென ஒளிர்பவள்..

வானத்திற்கு கீழே நிலவென ஒளிர்பவள்.. (கவிதை) வித்யாசாகர்! மாடியில் நின்று நீ பார்க்கையில் கீழே பூமியில் பூத்த மலர்களை நீ கண்டிருக்கமாட்டாய்.. எனைச் சுற்றி மலர்களாய் பொழிவது மேலிருந்து நீ பார்க்கையில் மட்டுமே சாத்தியப்படுகிறது.. மாடிவீடு என்றாலே இப்பொழுதும் அந்த மாடியும் மேலிருந்து எட்டிப்பார்க்கும் நீயும் சட்டென புகைப்படத்தைப்…

போ மகளே நீ போய் வா..

போ மகளே நீ போய் வா.. (கவிதை) வித்யாசாகர்!! என் மகளில்லாத வீட்டை எப்படியிந்த யுகத்துள் புதைத்து வைப்பேனோ? என் மகளில்லாத வீட்டில் எப்படி இந்தக் காற்றை நெஞ்சிலடைப்பேனோ? என் மகளில்லாத வீட்டில் யார்பேசும் குரல்கேட்டு என்னால் உயிர்த்திருக்க முடியுமோ? என் மகளில்லா தனிமை சகித்து சகித்து இனி…

நீயும் நீயும் நானாவேன்..

நீயும் நீயும் நானாவேன்.. (கவிதை) வித்யாசாகர்! 1 கிழித்துப்போட்ட காகிதங்களைப் போல கிடக்கிறது உனக்காக காத்திருந்த மனசு; அள்ளி தீயிலிட நினைக்கிறேன் நீயில்லா தனிமைதனில்… ——————————————————- 2 நீ நிலவிற்கீடு ஒரு படி அதற்கும் மேல்.. எப்போதும் ஒளிர்ந்துக்கொண்டே யிருப்பாய் நானந்த ஒளியின் ஏதேனுமொரு மூலையில் நின்று உனைத் தொட்டவாறே…