1. Home
  2. பணம்

Tag: பணம்

பணம்தான் வாழ்க்கையா?

”’ பணம்தான் வாழ்க்கையா?’’.. …………………………………. ‘கருவறையில் இருந்து கல்லறை வரை சில்லறை தேவை’ என்று சொல்லி கேட்டு இருப்போம். இது ஒரு விதத்தில் உண்மைதான். சாப்பாடு, துணி மணி, வீடு என்று எல்லாவற்றுக்கு பணம் தேவை. பணம் வைத்து இருப்பது தவறு இல்லை.. ஆனால், பணத்தின் மீது அதீத…

கருப்பு பணம்

கருப்புநிறத்தில் காட்டப்படும் வெறுப்பு கருப்புபணத்தில் காட்டப்படாத மாயமென்ன! வெள்ளைநிறமாய் மாறும் மோகம் மனத்தைமட்டுமல்ல பணத்தையும் பீடித்துகொண்ட பரபரப்பென்ன! குணம் குப்பையிலேயென்று குதூகலம்கொண்டாயே பணமும் குப்பைக்குச் சென்ற பரிதாபமென்ன!   நிழல்வாழ்க்கையின் நிகழ்த்தப்பட்ட சீர்திருத்தங்களால் சிலிர்ப்பு! நிஜவாழ்க்கையில் நடத்தப்படும் நிதர்சனங்களால் சலிப்பு! பணமில்லாதவன் பாயில் பகுமானமாய் படுத்துறங்க பணமேமெத்தையாய் மாறினாலும்…

பணம்

பணம் படுத்தற பாடு இருக்கே 💸💳💰💵💶💴💰💳💸 ● நான் உன்னுடன் இருந்தால் நீ செல்வந்தன். ● நான் உன்னை விட்டு பிரிந்தால் நீ ஏழை. ● என்னை மற்றவரிடம் கொடுத்தால் நீ கொடையாளி. ● என்னை மற்றவரிடமிருந்து பெற்றால் நீ கடனாளி. ● என்னை செலவு செய்தால் நீ…

பணம்

உழைப்பென்னும்  நான்கெழுத்துத்  தாயின்  சேயே! ****உலகமெலா மொருகுடையில் ஆளும் நீயே மழைத்துளிபோல் உயிர்நாடி யாகிப் போனாய் ***மழலைகளாய்ச் சில்லறைக ளீன்று போட்டாய் தழைத்தோங்கும் செல்வத்தின் ஆணி வேராய்த் ****தான்மட்டும் அடையாளச் சின்ன மானாய் பிழைப்போரும் உன்பின்னா லோட நாட்டம் ****பிச்சையெடுப் போருமுன்றன் மீதே நோட்டம் பொருளாதா ரப்போட்டி  நீண்ட…

பருப்பு பணம் !

பருப்பு பணம் !   புது கல் பதித்த மோதிரம் செய்யலாம் விலைஉயர்ந்த பதுக்கல் பருப்பு !   உலை ஏறும் அவசியமின்றி வேகிறது விலையற்றக் கொதியில் பருப்பு.   உறுப்பு தானத்தில் முதலிடம் கண்டோம் இனி பருப்பு தானம் செய்வோம் !   வானிலை மாறினால் பருவ…

பாலிசி பத்திரம்தொலைந்தாலும் பணம் பெறலாம்

இன்சூரன்ஸ்பாலிசி யின் முதிர்வு தொகைபெறுவது குறித்து, எல்.ஐ.சி.,யின் வாடிக்கையாளர்சேவைப்பிரிவின் மண்டல மேலாளர் வி.விஜயராகவன்: பாலிசி யின் தன்மையின்அடிப்படையில், பாலிசி முதிர்வுகுறித்ததகவல்கள், மூன்று அல்லது ஆறுமாதங்களுக்கு முன்பே, கடிதம், பதிவுத் தபால், மெயில் மூலமாக, பாலிசிதாரருக்கு தெரிவிக்கப் படும். அந்த சமயத்தில், அதை, ‘கிளைம்’ செய்யவில்லை எனில், அதன் பின், மூன்றுஆண்டுகளுக்குள், எப்போது வேண்டுமானாலும் பாலிசிப்பத்திரத்தை இன்சூரன்ஸ்நிறுவனத்தில் கொடுத்து, பாலிசிதாரர் அல்லது அவரின் வாரிசுகள்கிளைம் செய்யலாம்.பாலிசிப் பத்திரத்தை, பாலிசி எடுத்த கிளையில்சமர்ப்பித்து, முதிர்வு தொகையை பெறலாம்.மூன்றுஆண்டுகள் வரை, கிளைம் செய்யாமல் இருக்கும் இன்சூரன்ஸ் பாலிசிகள்,எல்.ஐ.சி.,யின் மத்திய அலுவலகத்துக்குஅனுப்பப்படும். இந்த பாலிசி தொகைகள்அனைத்தும்,தனியாக ஒரு வங்கிக்கணக்கில் பராமரிக்கப்படும். இந்தக் கணக்கிலிருந்தும்,பணத்தைபாலிசிதாரர் அல்லது வாரிசுதாரர் பெறமுடியும். சிலர், பாலிசி பத்திரத்தை தொலைத்து விட்டதாலும், பணத்தை திரும்பப்பெறாமல்இருக்கின்றனர். இவர்கள், பாலிசி எண், பிறந்ததேதி ஆகியவற்றின் அடிப்படையில்,பாலிசியின் விவரத்தை, பாலிசி எடுத்த இன்சூரன்ஸ்அலுவலகத்தில் பெற முடியும்.அதன்பின், பாலிசி யின் கவரேஜ் தொகையின் அடிப்படையில் சமர்ப்பிக்க வேண்டியஆவணங்களை சமர்ப்பிக்கவேண்டும். அதாவது, பாலிசியின் கவரேஜ்தொகை மிகவும்குறைவாக இருந்தால், முகவரி, புகைப்பட அடையாளச் சான்று, பாலிசி பத்திரம்தொலைந்தவிவரம் கொடுத்து, கிளைம்பெற முடியும். பாலிசியின்கவரேஜ் தொகை அதிகமாக இருந்தால், பத்திரிகைகளில் விளம்பரம் செய்து,யாராவது ஒருவரிடம், ‘சூரிட்டி’ வாங்கித் தருமாறு கூறுவர். இதில், ‘பாலிசி என்னுடையதுதான். அதன் ஒரிஜினல்பத்திரத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதில், ஏதாவதுசிக்கல்ஏற்பட்டால், அதற்கான முழுப்பொறுப்பையும் நானேஏற்கிறேன்’ என, கடிதம்அல்லது’பாண்ட்’ பத்திரத்தில் எழுதி வாங்கிக் கொள்வர். கோரப்படாதஇன்சூரன்ஸ் தொகையைத் திரும்பப் பெற, கீழ்கண்ட ஆவணங்களைசமர்ப்பிக்கவேண்டும். வாரிசுதாரர் மற்றும் பாலிசிதாரரின் தற்போதையமுகவரிச் சான்று;புகைப்படத்துடன் கூடியஅடையாளச் சான்று; பாலிசி பத்திரம்ஒரிஜினல்; பாலிசிப் பத்திரம்தொலைந்து விட்டால், பாலிசியின் எண், பிறந்த தேதி, பாலிசிதாரர் பெயர், பாலிசிஎடுத்தகிளையின் முகவரி கொடுத்து, பாலிசிவிவரத்தைத் தெரிந்துக் கொள்ளலாம்.   பணத்தைபெறுபவரின் வங்கிக் கணக்கு விவரம், ஒன்றுக்கு மேற்பட்ட வாரிசுகள் இருந்தால்,அவர்களில் யார் பணத்தைப் பெறவேண்டும் என்பதை, மற்ற வாரிசுகள்நியமனம் செய்துகையெழுத்திட்ட கடிதம்ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

பணம்+நோய் = வளைகுடா வாழ் இந்தியர்களின் சம்பாத்தியம்!

‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’- ஆனால் பணம் என்ற செல்வத்தின் மீது நாட்டம் கொண்டு வளைகுடா நாடுகளுக்கு பறக்கும் இந்தியர்களின் ஆரோக்கியத்திற்கு என்ன நிகழ்கிறது? பணத்தை சம்பாதித்துவிட்டு தாயகம் திரும்பும் வேளையில் ஆரோக்கியம் என்ற செல்வம் சீரழிந்து போயிருக்கும். கை நிறைய பணமும்,உடல் நிறைய நோய்களையும் சுமந்துகொண்டு வளைகுடா…

ஏக்கங்களைத் தீர்க்கும் “20”

1. நாம் ஆனந்தமாக இருக்க வேண்டுமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்வது நம் மனம்தான். `நான் ஆனந்தமாக இருக்கிறேன்’ என்று நீங்கள் கருதினால் ஆனந்தமாக இருக்கிறீர்கள். இல்லை என்றால், ஆனந்தம் உங்களிடம் `மிஸ்’ ஆகிவிடும். அதனால், எப்போதும் ஆனந்தமாக இருங்கள். 2. ஏக்கங்களும், எதிர்பார்ப்புகளும் இல்லாத மனிதர்களே கிடையாது. ஒவ்வொருவருக்குள்ளும் அவை…