பணம்

Vinkmag ad

உழைப்பென்னும்  நான்கெழுத்துத்  தாயின்  சேயே!

****உலகமெலா மொருகுடையில் ஆளும் நீயே

மழைத்துளிபோல் உயிர்நாடி யாகிப் போனாய்

***மழலைகளாய்ச் சில்லறைக ளீன்று போட்டாய்

தழைத்தோங்கும் செல்வத்தின் ஆணி வேராய்த்

****தான்மட்டும் அடையாளச் சின்ன மானாய்

பிழைப்போரும் உன்பின்னா லோட நாட்டம்

****பிச்சையெடுப் போருமுன்றன் மீதே நோட்டம்

பொருளாதா ரப்போட்டி  நீண்ட நாளாய்ப்

****போர்களையும் தூண்டிவிடும் தூண்டு கோலாய்

இருளான நிலைமைக்கு மாக்கி விட்டாய்

****இறைபக்தி எண்ணங்கள் போக்கி விட்டாய்

வருமானம் ஈட்டுதலை வெறியா யாக்கி

****வறியோரைக் கொல்லுதலே குறியா  யாக்கி

ஒருமான  மில்லாத கூட்டம் சேர்த்தாய்

****ஒழுக்கத்தைப் புதைத்திடவே செய்தாய் நீயே

விரும்பிப்போ னாலும்நீ எம்மை விட்டு

****விலகித்தான் போகின்றாய்; விலகிப் போனால்

விரும்பித்தான் வருகின்றாய் உன்றன் மாய

****வித்தைகளை எங்கிருந்து கற்றாய் நீயும்?

நிரம்பத்தான் ஆசையுடை உடுத்திக் கொண்டாய்

****நிம்மதியை உளம்விட்டே எடுத்து விட்டாய்

வரம்பில்லாத் தேவைகளைக் காட்டு கின்றாய்

***வங்கியின்பால் எங்களையும் ஓட்டு கின்றாய்

அதிரை கவியன்பன் கலாம், அபுதாபி

News

Read Previous

சொல்லத்தான் நினைக்கிறேன்

Read Next

பள்ளி மாணவர்கள் பங்கேற்ற டெங்கு விழிப்புணர்வு பேரணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *