பாலிசி பத்திரம்தொலைந்தாலும் பணம் பெறலாம்

Vinkmag ad
இன்சூரன்ஸ்பாலிசி யின் முதிர்வு தொகைபெறுவது குறித்து, எல்.ஐ.சி.,யின் வாடிக்கையாளர்சேவைப்பிரிவின் மண்டல மேலாளர்

வி.விஜயராகவன்: பாலிசி யின் தன்மையின்அடிப்படையில், பாலிசி முதிர்வுகுறித்ததகவல்கள், மூன்று அல்லது ஆறுமாதங்களுக்கு முன்பே,

கடிதம், பதிவுத் தபால், மெயில் மூலமாக, பாலிசிதாரருக்கு தெரிவிக்கப் படும்.
அந்த சமயத்தில், அதை, ‘கிளைம்’ செய்யவில்லை எனில், அதன் பின், மூன்றுஆண்டுகளுக்குள், எப்போது வேண்டுமானாலும் பாலிசிப்பத்திரத்தை இன்சூரன்ஸ்நிறுவனத்தில் கொடுத்து, பாலிசிதாரர் அல்லது அவரின் வாரிசுகள்கிளைம் செய்யலாம்.பாலிசிப் பத்திரத்தை, பாலிசி எடுத்த கிளையில்சமர்ப்பித்து, முதிர்வு தொகையை பெறலாம்.மூன்றுஆண்டுகள் வரை, கிளைம் செய்யாமல் இருக்கும் இன்சூரன்ஸ் பாலிசிகள்,எல்.ஐ.சி.,யின் மத்திய அலுவலகத்துக்குஅனுப்பப்படும். இந்த பாலிசி தொகைகள்அனைத்தும்,தனியாக ஒரு வங்கிக்கணக்கில் பராமரிக்கப்படும். இந்தக் கணக்கிலிருந்தும்,பணத்தைபாலிசிதாரர் அல்லது வாரிசுதாரர் பெறமுடியும்.
சிலர், பாலிசி பத்திரத்தை தொலைத்து விட்டதாலும், பணத்தை திரும்பப்பெறாமல்இருக்கின்றனர். இவர்கள், பாலிசி எண், பிறந்ததேதி ஆகியவற்றின் அடிப்படையில்,பாலிசியின் விவரத்தை, பாலிசி எடுத்த இன்சூரன்ஸ்அலுவலகத்தில் பெற முடியும்.அதன்பின், பாலிசி யின் கவரேஜ் தொகையின் அடிப்படையில் சமர்ப்பிக்க வேண்டியஆவணங்களை சமர்ப்பிக்கவேண்டும். அதாவது, பாலிசியின் கவரேஜ்தொகை மிகவும்குறைவாக இருந்தால், முகவரி, புகைப்பட அடையாளச் சான்று, பாலிசி பத்திரம்தொலைந்தவிவரம் கொடுத்து, கிளைம்பெற முடியும்.
பாலிசியின்கவரேஜ் தொகை அதிகமாக இருந்தால், பத்திரிகைகளில் விளம்பரம் செய்து,யாராவது ஒருவரிடம், ‘சூரிட்டி’ வாங்கித் தருமாறு கூறுவர். இதில், ‘பாலிசி என்னுடையதுதான். அதன் ஒரிஜினல்பத்திரத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதில், ஏதாவதுசிக்கல்ஏற்பட்டால், அதற்கான முழுப்பொறுப்பையும் நானேஏற்கிறேன்’ என, கடிதம்அல்லது’பாண்ட்’ பத்திரத்தில் எழுதி வாங்கிக் கொள்வர்.
கோரப்படாதஇன்சூரன்ஸ் தொகையைத் திரும்பப் பெற, கீழ்கண்ட ஆவணங்களைசமர்ப்பிக்கவேண்டும். வாரிசுதாரர் மற்றும் பாலிசிதாரரின் தற்போதையமுகவரிச் சான்று;புகைப்படத்துடன் கூடியஅடையாளச் சான்று; பாலிசி பத்திரம்ஒரிஜினல்; பாலிசிப் பத்திரம்தொலைந்து விட்டால், பாலிசியின் எண், பிறந்த தேதி, பாலிசிதாரர் பெயர், பாலிசிஎடுத்தகிளையின் முகவரி கொடுத்து, பாலிசிவிவரத்தைத் தெரிந்துக் கொள்ளலாம்.

 

பணத்தைபெறுபவரின் வங்கிக் கணக்கு விவரம், ஒன்றுக்கு மேற்பட்ட வாரிசுகள் இருந்தால்,அவர்களில் யார் பணத்தைப் பெறவேண்டும் என்பதை, மற்ற வாரிசுகள்நியமனம் செய்துகையெழுத்திட்ட கடிதம்ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

News

Read Previous

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

Read Next

மகளிர் சுய உதவிக்குழு விளையாட்டுப் போட்டி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *