1. Home
  2. பத்திரம்

Tag: பத்திரம்

பாலிசி பத்திரம்தொலைந்தாலும் பணம் பெறலாம்

இன்சூரன்ஸ்பாலிசி யின் முதிர்வு தொகைபெறுவது குறித்து, எல்.ஐ.சி.,யின் வாடிக்கையாளர்சேவைப்பிரிவின் மண்டல மேலாளர் வி.விஜயராகவன்: பாலிசி யின் தன்மையின்அடிப்படையில், பாலிசி முதிர்வுகுறித்ததகவல்கள், மூன்று அல்லது ஆறுமாதங்களுக்கு முன்பே, கடிதம், பதிவுத் தபால், மெயில் மூலமாக, பாலிசிதாரருக்கு தெரிவிக்கப் படும். அந்த சமயத்தில், அதை, ‘கிளைம்’ செய்யவில்லை எனில், அதன் பின், மூன்றுஆண்டுகளுக்குள், எப்போது வேண்டுமானாலும் பாலிசிப்பத்திரத்தை இன்சூரன்ஸ்நிறுவனத்தில் கொடுத்து, பாலிசிதாரர் அல்லது அவரின் வாரிசுகள்கிளைம் செய்யலாம்.பாலிசிப் பத்திரத்தை, பாலிசி எடுத்த கிளையில்சமர்ப்பித்து, முதிர்வு தொகையை பெறலாம்.மூன்றுஆண்டுகள் வரை, கிளைம் செய்யாமல் இருக்கும் இன்சூரன்ஸ் பாலிசிகள்,எல்.ஐ.சி.,யின் மத்திய அலுவலகத்துக்குஅனுப்பப்படும். இந்த பாலிசி தொகைகள்அனைத்தும்,தனியாக ஒரு வங்கிக்கணக்கில் பராமரிக்கப்படும். இந்தக் கணக்கிலிருந்தும்,பணத்தைபாலிசிதாரர் அல்லது வாரிசுதாரர் பெறமுடியும். சிலர், பாலிசி பத்திரத்தை தொலைத்து விட்டதாலும், பணத்தை திரும்பப்பெறாமல்இருக்கின்றனர். இவர்கள், பாலிசி எண், பிறந்ததேதி ஆகியவற்றின் அடிப்படையில்,பாலிசியின் விவரத்தை, பாலிசி எடுத்த இன்சூரன்ஸ்அலுவலகத்தில் பெற முடியும்.அதன்பின், பாலிசி யின் கவரேஜ் தொகையின் அடிப்படையில் சமர்ப்பிக்க வேண்டியஆவணங்களை சமர்ப்பிக்கவேண்டும். அதாவது, பாலிசியின் கவரேஜ்தொகை மிகவும்குறைவாக இருந்தால், முகவரி, புகைப்பட அடையாளச் சான்று, பாலிசி பத்திரம்தொலைந்தவிவரம் கொடுத்து, கிளைம்பெற முடியும். பாலிசியின்கவரேஜ் தொகை அதிகமாக இருந்தால், பத்திரிகைகளில் விளம்பரம் செய்து,யாராவது ஒருவரிடம், ‘சூரிட்டி’ வாங்கித் தருமாறு கூறுவர். இதில், ‘பாலிசி என்னுடையதுதான். அதன் ஒரிஜினல்பத்திரத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதில், ஏதாவதுசிக்கல்ஏற்பட்டால், அதற்கான முழுப்பொறுப்பையும் நானேஏற்கிறேன்’ என, கடிதம்அல்லது’பாண்ட்’ பத்திரத்தில் எழுதி வாங்கிக் கொள்வர். கோரப்படாதஇன்சூரன்ஸ் தொகையைத் திரும்பப் பெற, கீழ்கண்ட ஆவணங்களைசமர்ப்பிக்கவேண்டும். வாரிசுதாரர் மற்றும் பாலிசிதாரரின் தற்போதையமுகவரிச் சான்று;புகைப்படத்துடன் கூடியஅடையாளச் சான்று; பாலிசி பத்திரம்ஒரிஜினல்; பாலிசிப் பத்திரம்தொலைந்து விட்டால், பாலிசியின் எண், பிறந்த தேதி, பாலிசிதாரர் பெயர், பாலிசிஎடுத்தகிளையின் முகவரி கொடுத்து, பாலிசிவிவரத்தைத் தெரிந்துக் கொள்ளலாம்.   பணத்தைபெறுபவரின் வங்கிக் கணக்கு விவரம், ஒன்றுக்கு மேற்பட்ட வாரிசுகள் இருந்தால்,அவர்களில் யார் பணத்தைப் பெறவேண்டும் என்பதை, மற்ற வாரிசுகள்நியமனம் செய்துகையெழுத்திட்ட கடிதம்ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

பத்திரமாக வெடிப்போம் பட்டாசு

எம்.ஏ.அலீம் தீபாவளியையும் பட்டாசையும் பிரித்துப் பார்க்கவே முடியாது. விபத்தில்லாத, உடல் பாதிப்பில்லாத தீபாவளிதான் எல்லோருக்கும் இனிக்கும். பாதுகாப்பு, முன்னெச்சரிக்கையை நாம் எந்த அளவு கடைப்பிடிக்கிறோம் என்பதைப் பொறுத்தே அது அமையும். பட்டாசு வெடிக்கும்போதும், கையாளும்போதும் ஏற்படும் பாதிப்புகளை எப்படிச் சமாளிப்பது, பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன? பட்டாசுகளைக்…

நிலம் பதிவு செய்தும் பத்திரங்கள் பெற முதுகுளத்தூரில் காத்திருப்புஆபிஸ் மாற்றம் பயனாளிகள் அவதி

முதுகுளத்தூர்:முதுகுளத்தூர் பத்திரப்பதிவு துறை அலுவலக மாற்றத்தால், நிலம் தொடர்பான பதிவுகள் முடிந்தும், பத்திரங்களை பெற, காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த, முதுகுளத்தூர் பத்திர பதிவு அலுவலகம், 15 ஆண்டுகளுக்கும் மேலாக சேதமடைந்த கட்டடத்தில், செயல்பட்டு வந்தது. மழை காலங்களில், பதிவேடுகள் அழியும் அபாயம் குறித்து, “தினமலர்’…