பணம்தான் வாழ்க்கையா?

Vinkmag ad

”’ பணம்தான் வாழ்க்கையா?’’..
………………………………….

‘கருவறையில் இருந்து கல்லறை வரை சில்லறை தேவை’ என்று சொல்லி கேட்டு இருப்போம். இது ஒரு விதத்தில் உண்மைதான்.

சாப்பாடு, துணி மணி, வீடு என்று எல்லாவற்றுக்கு பணம் தேவை. பணம் வைத்து இருப்பது தவறு இல்லை.. ஆனால், பணத்தின் மீது அதீத ஆசை வைத்து இருப்பதுதான் தவறு..

பணத்துக்கு அதிக முக்கியம் கொடுக்கும் போது உறவுகளுக்கு இடையே விரிசல்கள் ஏற்படலாம்.

ஒரு வணிக பத்திரிகையின் ஆசிரியர் சொல்கிறார்:

“பணம்தான் சமுதாயத்துக்கு ரொம்ப முக்கியம். ஒருவேளை பணத்தை வைத்து எந்த பொருளையும் வாங்கவோ, விற்கவோ முடியாது என்ற நிலை வந்து விட்டால், எல்லாரும் குழம்பிபோய் விடுவார்கள். ஒரே மாதத்தில் போரே வெடிக்கும்.”
இருந்தாலும், பணத்தால் எல்லா வற்றையும் வாங்க முடியாது. பணத்தை வைத்துக் கொண்டு, சாப்பாட்டை வாங்கலாம், பசியை வாங்க முடியாது,

மருந்தை வாங்கலாம், ஆரோக்கியத்தை வாங்க முடியாது, மெத்தையை வாங்கலாம், தூக்கத்தை வாங்க முடியாது,

புத்தகத்தை வாங்கலாம், புத்தியை வாங்க முடியாது, நகையை வாங்கலாம், அழகை வாங்க முடியாது,

ஆடம்பரத்தை வாங்கலாம் அன்பை வாங்க முடியாது, கூட்டத்தை வாங்கலாம், நண்பர்களை வாங்க முடியாது,

வேலைக்காரர்களை வாங்கலாம், விசுவாசத்தை வாங்க முடியாது என்று நார்வே நாட்டு கவிஞர் அர்னா கர்பார்க் சொல்லி உள்ளார்..
வாழ்வதற்கு பணம் தேவைதான், ஆனால் பணமே வாழ்க்கையாகிவிடக் கூடாது. இந்த உண்மையை உணரும் ஒருவர் திருப்தியாகவும் ஆனந்தமாக வாழ்வார்.

பண ஆசை எல்லா விதமான தீமைக்கும் வேராக இருக்கிறது; சிலர் இந்த ஆசையை வளர்த்துக் கொண்டு . பலவித வேதனைகளால் தங்களையே ஊடுருவக் குத்திக் கொண்டு இருக்கிறார்கள்”

ஆம்.,நண்பர்களே..,

பணத்தையும், சொத்து சுகத்தையும் பெரிதாக எண்ணி, பணமே குறிக்கோள் என்று எண்ணி வாழ்பவர் களுடன் பழகாதீர்கள்.

பணத்தைவிட நல்ல குணங்களை பெரிதாக மதிப்பவர்களோடு பழகுங்கள்…(ஆக்கம். உடுமலை சு.தண்டபாணி…)

News

Read Previous

கொரோனா

Read Next

உலகை அலற வைத்த நோய்களின் கோர தாண்டவம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *