பருப்பு பணம் !

Vinkmag ad

பருப்பு பணம் !

 

புது கல் பதித்த

மோதிரம் செய்யலாம்

விலைஉயர்ந்த

பதுக்கல் பருப்பு !

 

உலை ஏறும் அவசியமின்றி

வேகிறது

விலையற்றக் கொதியில்

பருப்பு.

 

உறுப்பு தானத்தில்

முதலிடம் கண்டோம்

இனி

பருப்பு தானம் செய்வோம் !

 

வானிலை மாறினால்

பருவ காலம்

விலை வான் ஏறியதால்

இது

பருப்பு காலம் !

 

அந்நிய நாட்டில்

பதுங்கி இருக்கிறது

பணம் கறுப்பாக

சொந்த நாட்டில்

பதுங்கி இருக்கிறது

பணம் பருப்பாக !

 

– அப்துல் வதூத், துபாய்

News

Read Previous

எழுதுகோல்!

Read Next

மண்ணைவிட்டே ஒழித்திடுவோம் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *