1. Home
  2. கண்ணதாசன்

Tag: கண்ணதாசன்

கண்ணதாசன் பார்வையில் …மஹா பெரியவா

கண்ணதாசன் பார்வையில் …மஹா பெரியவா …. அதோ, போய்க்கொண்டு இருக்கிறார். – அர்த்தமுள்ள இந்து மதம் நிறைவு பகுதியில், கவியரசர் கண்ணதாசன் அவர்கள். ….இப்படிப்பட்ட யோகம் கை வந்த ஒருவர், காஞ்சி பெரியவர். அதோ, அவர் எங்கே போகிறார் என்று சொல்லாமலேயே போய் கொண்டு இருக்கிறார். இந்த வயதிலும்…

கண்ணதாசன் பாடல்கள்

Karumuthu Kannan on K’Dasan http://www.youtube.com/watch?v=cJvANik4Knw Maruthu Mohan on K’Dasan http://www.youtube.com/watch?v=7jZh2DmIOuE Vamanan on Kannadhasan http://www.youtube.com/watch?v=65RGzjGXPXk Gangai Amaran on K’Dasan http://www.youtube.com/watch?v=_iP6q39vZ5c CBE-K’Vizha 26.06.11 – Isaikavi Ramanan http://www.youtube.com/watch?v=E8bb5H3ceKY CBE-K’Vizha 26.06.11 – Va.Ve.Su. http://www.youtube.com/watch?v=dBhpF4JZT7A CBE-K’Vizha 26.06.11 – MarabinMaindhan http://www.youtube.com/watch?v=6dMiPMj3evs Kannadhasan…

கண்ணதாசனின் பொன்மொழிகள்

அறிவாளிகளின் குழந்தைகள் பெரும்பாலும் முட்டாளாகவே வளர்கிறார்கள், நிழலிலே வளரும் செடி சோகையாக இருப்பது போல பெர்னாட்ஷா வை நினைத்து கொண்டு தன்னை கண்ணாடியில் பார்ப்பவர்கள், நடிகையை நினைத்து கொண்டு மனைவியை கட்டிபிடிப்பவர்கள் ஆவர் கண்களை மூடுங்கள், காதுகளை அடைத்து கொள்ளுங்கள் இதயத்தையும் மூடுங்கள், செய்துவிட்டீர்களா? சபாஷ், நீங்கள் அரசியல்…

கண்ணதாசன் கண்ட இஸ்லாம்! (ஆய்வு)

“இஸ்லாமியத் திருமறையின் முதல் இரண்டு பாகங்களைப் பூர்த்தி செய்ததில் என் பங்கும் முழுக்க இருந்தாலும், அதன் கவிதை மற்றும் ஒவ்வொரு வாக்கியத்தின் தமிழ் நடையும் கவிஞரால் சரி செய்யப்பட்டவையாகும். “அல்ஃபாத்திஹா” எனும் “அல்ஹம்து சூராவை” அழகிய தமிழில் “திறப்பு” கவிதையாகக் கவிஞர் தந்துள்ள சிறப்பு ஒன்றுக்கே அவர் இறைவனின்…

ஏற்றுங்கள்; போற்றுங்கள்!

கவியரசர் கவிதை…..                அன்னை இந்திரா மறைந்த நாள் 30.10…..……….1984 ஏற்றுங்கள்; போற்றுங்கள்! திங்களோர்    முறைதான்   பூக்கும் சித்திர   வடிவம்   காட்டும் செங்கழு    நீர்ப்பூப்    போல தேயமோர்    திருநாள்   காண(த்) தங்களை     ஈந்தார்;    அந்தத் தலைவரை    எண்ணும்    நாளே மங்கலத்    திருநாள்;    இன்று வணங்குவோம்  அவரை  வாழ்த்த.   வெடித்தது    கருவி;    ஆங்கே வீழ்ந்தது   குருதி;    மண்ணில் துடித்தது      ஆவி;    ஆயின் தொட்டகை     விட்டா    ரில்லை பிடித்ததோர்     கொடியை    மார்பில் பிணைத்தவர்    மறைந்தார்;   அந்த படித்தளத்    தின்மேல்    தானே பறக்கின்ற  …

கண்ணதாசனின் இதயச் சுரங்கத்துள்தான்…..

“ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் “என எழுதிய கண்ணதாசனின் இதயச்சுரங்கத்துள்தான் எத்தனை கேள்வி…? கவியரசர் கண்ணதாசன் பற்றி அவரது மகன் காந்தி கண்ணதாசன் சொன்ன ஒரு செய்தி : செட்டிநாட்டிலிருந்து எழுத்துக் கனவுகளுடன் பதினான்கு வயசுப் பையனாக சென்னை வந்தார்கவியரசு கண்ணதாசன். அன்று இரவு படுக்க இடமின்றி மெரினா கடற்கரையில் காந்திசிலைக்குப் பின்னால் பெட்டியைத் தலைக்கு வைத்து படுத்திருக்கிறார் கவிஞர். நள்ளிரவு போலீஸ்காரரின் உருட்டுத்தடி அவரைத் தட்டி மிரட்டியது. நகரத்தார் விடுதிக்குப்போக வேண்டும். இரவு மண்ணாடி வரை நடந்து போக முடியாது. அதனால் கடற்கரையில்படுத்துக் கொள்ள அனுமதி கேட்ட அந்தப் பதினான்கு வயதுப் பையனின் கோரிக்கையைப்போலீஸ் நிராகரித்தது. “படு…படுக்கணும்னா நாலணா கொடு” என்று காவல் மிரட்டியது.நாலணாவுக்கு வழியின்றிக் கலங்கிய கண்களுடன் காந்தி சிலையில் இருந்துநடந்திருக்கிறார் கண்ணதாசன். அவர் வளர்ந்து கவியரசாகி “சுமைதாங்கி” என்ற சொந்தப்படம் எடுக்கிறார். கதாநாயகனாகநடித்த ஜெமினி கணேசனை எங்கிருந்து நடக்க விடுவது என்று யோசித்த கவிஞர் அதே காந்திசிலையைத் தேர்ந்தெடுத்தார். நள்ளிரவு படப்பிடிப்பு. ஆனால் படத்தில் இரவு ஏழு மணி மாதிரிஇருக்க கடற்கரை ரோட்டில் நிறைய கார்கள் வரிசையாக வர வேண்டும். ஏழு கார்களை நிற்கவைத்து மாறிமாறி ஒன்றன்பின் ஒன்றாக வருகிற மாதிரி படம் எடுக்கிறார்கள். தன வீட்டில்உள்ளவர்களிடம் இந்தப் படத்தைப் பார்த்து கண்ணதாசன் என்ன சொன்னார் தெரியுமா..? “இந்தக் கார்களை கவனித்தீர்களா? இவை எல்லாமே நம்முடைய கார்கள். வாழ முடியும்என்று நம்பிக்கையோடு சென்னை வந்த என்னை இந்த இடத்தில்தான் நாலணா இல்லைஎன்று போலீஸ் நடக்கவிட்டது… இதே இடத்தில் என் ஏழு கார்களை ஓடவிட்டுப் படம்எடுத்திருக்கிறேன். நம்பிக்கை என்னை ஜெயிக்க வைத்துவிட்டது” என்றாராம். அந்தப் பாடல்…. மனம் இருந்தால் பறவை கூட்டில் மான்கள் வாழலாம் வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையைக் காணலாம் துணிந்துவிட்டால் தலையில் எந்த சுமையும் தாங்கலாம் குணம்! குணம்! அது கோவிலாகலாம்… மனிதன் என்பவன் தெய்வமாகலாம் வாரி வாரி வழங்கும் போது வள்ளலாகலாம் வாழை போல தன்னை தந்து தியாகியாகலாம் உறுதியோடு மெழுகு போல ஒளியை வீசலாம்

துபாயில் கவியரசு கண்ணதாசன் விழா

துபாய் : துபாயில் 06.07.2012 வெள்ளிக்கிழமை காலை 10.00மணிக்கு (சிவ்ஸ்டார் பவன், கராமாவில் – கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கம் (பம்மல்) சார்பில்கவியரசு கண்ணதாசன் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் – சாந்திநிலையத்தில் இடம்பெற்ற கவிஞர் கண்ணதாசனின் இறைவன் வருவான்.. அவன் என்றும் நல்வழி தருவான் என்கிற பாடலே…

கண்ணதாசன் பேட்டி – தீபம் இலக்கிய மாத இதழுக்காக!!

அரசியல், சினிமா, இலக்கியம் என்று வலம் வரும் அஷ்டாவதானி. ‘அவரைக் கண்டு பிடிக்க முடியாது; கண்டு பிடித்து ஒரு இடத்தில் அமர்த்தி விட்டால் வேண்டியதை நிமிஷத்தில் முடித்துக் கொடுத்து விடுவார்’- என்பது திரை உலக அனுபவஸ்தர்களுக்கு மட்டுமே தெரிந்த ஒரு ரகசியம். முதல் நாள் நான் அவர் வீட்டுக்குச் சென்றபோது புரொகிராமுக்காக’ அவர் வெளியே புறப்பட்டுக்…