கண்ணதாசனின் இதயச் சுரங்கத்துள்தான்…..

Vinkmag ad

“ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் “என எழுதிய கண்ணதாசனின் இதயச்சுரங்கத்துள்தான் எத்தனை கேள்வி…?

கவியரசர் கண்ணதாசன் பற்றி அவரது மகன் காந்தி கண்ணதாசன் சொன்ன ஒரு செய்தி :

செட்டிநாட்டிலிருந்து எழுத்துக் கனவுகளுடன் பதினான்கு வயசுப் பையனாக சென்னை வந்தார்கவியரசு கண்ணதாசன். அன்று இரவு படுக்க இடமின்றி மெரினா கடற்கரையில் காந்திசிலைக்குப் பின்னால் பெட்டியைத் தலைக்கு வைத்து படுத்திருக்கிறார் கவிஞர்.

நள்ளிரவு போலீஸ்காரரின் உருட்டுத்தடி அவரைத் தட்டி மிரட்டியது. நகரத்தார் விடுதிக்குப்போக வேண்டும். இரவு மண்ணாடி வரை நடந்து போக முடியாது. அதனால் கடற்கரையில்படுத்துக் கொள்ள அனுமதி கேட்ட அந்தப் பதினான்கு வயதுப் பையனின் கோரிக்கையைப்போலீஸ் நிராகரித்தது. “படு…படுக்கணும்னா நாலணா கொடு” என்று காவல் மிரட்டியது.நாலணாவுக்கு வழியின்றிக் கலங்கிய கண்களுடன் காந்தி சிலையில் இருந்துநடந்திருக்கிறார் கண்ணதாசன்.

அவர் வளர்ந்து கவியரசாகி “சுமைதாங்கி” என்ற சொந்தப்படம் எடுக்கிறார். கதாநாயகனாகநடித்த ஜெமினி கணேசனை எங்கிருந்து நடக்க விடுவது என்று யோசித்த கவிஞர் அதே காந்திசிலையைத் தேர்ந்தெடுத்தார். நள்ளிரவு படப்பிடிப்பு. ஆனால் படத்தில் இரவு ஏழு மணி மாதிரிஇருக்க கடற்கரை ரோட்டில் நிறைய கார்கள் வரிசையாக வர வேண்டும். ஏழு கார்களை நிற்கவைத்து மாறிமாறி ஒன்றன்பின் ஒன்றாக வருகிற மாதிரி படம் எடுக்கிறார்கள். தன வீட்டில்உள்ளவர்களிடம் இந்தப் படத்தைப் பார்த்து கண்ணதாசன் என்ன சொன்னார் தெரியுமா..? “இந்தக் கார்களை கவனித்தீர்களா? இவை எல்லாமே நம்முடைய கார்கள். வாழ முடியும்என்று நம்பிக்கையோடு சென்னை வந்த என்னை இந்த இடத்தில்தான் நாலணா இல்லைஎன்று போலீஸ் நடக்கவிட்டது… இதே இடத்தில் என் ஏழு கார்களை ஓடவிட்டுப் படம்எடுத்திருக்கிறேன். நம்பிக்கை என்னை ஜெயிக்க வைத்துவிட்டது” என்றாராம்.

அந்தப் பாடல்….

மனம் இருந்தால் பறவை கூட்டில் மான்கள் வாழலாம்

வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையைக் காணலாம்

துணிந்துவிட்டால் தலையில் எந்த சுமையும் தாங்கலாம்

குணம்! குணம்! அது கோவிலாகலாம்…

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்

வாரி வாரி வழங்கும் போது வள்ளலாகலாம்

வாழை போல தன்னை தந்து தியாகியாகலாம்

உறுதியோடு மெழுகு போல ஒளியை வீசலாம்

News

Read Previous

சிங்கப்பூர் இஃப்தார் நிகழ்வில் அமைச்சர் சண்முகம் பங்கேற்பு

Read Next

துபையில் இந்திய கன்சுலேட் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *