தமிழ் பெண்கள் சங்கம்

Vinkmag ad

தமிழ் பெண்கள் சங்கம்

“பெண்மை யறிவோங்கப் பீடுயரும் பெண்மைதான்
ஒண்மையுற வோங்கும் உலகு”

அன்புத் தோழிகளுக்கு,
எங்களது பணிவு கலந்த வணக்கம்.

அறிவு கொண்ட மனித உயிராக விளங்கும் பெண் இயற்கையின் வரப்பிரசாதம். இறைவனின் படைப்பில் சிவசக்தி சொரூபம். நாணம் பேணி நகுதலை அணியாகக் கொண்ட பெண் வீட்டுப் பொருளாதாரத்தை உயர்த்த அலுவலகம் சென்று உழைத்து குடும்பத்தைப் பேணுவதோடு, சமூக அக்கறையிலும் தன் பங்கைப் பதிக்கும் கண். பெண் இல்லாத் துறை இல்லை என்று சொல்லுமளவு உயர்ந்து நிற்கும் பெண் மனம் படைத்த சக மனுஷி.
பெண்களின் எண்ணங்களுக்கு வண்ணம் சேர்க்க 1974 – 2013 ஆம் ஆண்டு வரை இயங்கி வந்த தமிழ் பெண்கள் சங்கம் தற்போது சமுதாய அபிவிருத்தி அதிகார சபையினால் ( CDA) அங்கீகரிக்கப்பட்ட சங்கமாக 2019 மார்ச் 7லில் இருந்து தனது பயணத்தை மீண்டும் புதுப் பொலிவோடு ஆரம்பித்துள்ளது.

** நம் தமிழ் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் கடல் கடந்தும் கட்டிக் காத்து அதை வளரும் நம் அன்புச் செல்வங்களுக்குக் கற்றுத் தருதல்.

** இயல், இசை, நாடகம் போன்ற பல்துறை ஞானத்தை ஊட்டுதல்.

** குழந்தைகளைத் தமிழில் பேச வைத்து மேடையேற்றி அழகு பார்த்தல்.

** ஆண்கள், பெண்களின் தனித் திறமைகளுக்கு களம் அமைத்துத் தருதல்.

** புது முகங்களோடு புதிய நட்பினை வளர்த்தல்.

** இலக்கியம், மருத்துவம் போன்ற கருத்தரங்குகள் நடத்துதல்.

** பண்டிகை கால விழாக்கள் கொண்டாடுதல்.

** இந்தியத் துணைத் தூதரகத்தோடு இணைந்து தன்னார்வத் தொண்டு செய்தல்.

** சமுதாயப் பணிகளில் தன் பங்கினைத் தருதல்
போன்ற இன்னும் பல நிகழ்வுகளில் தடம் பதிப்பதே தமிழ் பெண்கள் சங்கத்தின் பணிகளாகும்.

தமிழ் பெண்கள் சங்கம் என்ற போதிலும் நிகழ்ச்சிகள் குடும்பத்தோடு இணைந்தே கொண்டாடப்பட்டு இரவு உணவோடு இனிதே நிறைவுறும்.

ஒரு குடும்பத்திற்கு ஒரு வருடத்திற்கு AED 500 செலுத்தி இச்சங்கத்தில் பெண்கள் உறுப்பினராகச் சேர்ந்து கொள்ளலாம். வருடத்திற்கு 8 – 10 நிகழ்ச்சிகள் நடைபெறும்.
இச் சங்கத்தில் உறுப்பினராகச் சேர்ந்து கைகோர்க்க அன்புடன் அழைக்கின்றோம்.
அனைவரும் வருக!! ஆனந்தம் பெறுக!!
நட்புடன்,
தமிழ் பெண்கள் சங்கம்.
தொடர்பு கோள்ள வேண்டிய
WhatsApp எண்,
மீனாகுமாரி பத்மநாதன் 050 7988301,
சக்தி ராம் 050 6529002,
உஷா கிருஷ்ணன் 056 1432440
பிரேமா ராஜா 050 1193705

News

Read Previous

அமைதி

Read Next

மருந்தெல்லாம் மருந்தல்ல…!

Leave a Reply

Your email address will not be published.