அமைதி

Vinkmag ad

துக்ளக் இதழின் முன்னாள் கட்டுரையாளர் சாவித்திரி கண்ணன் முகநூல் பக்கத்திலிருந்து…
அமைதி,வளர்ச்சி,முன்னேற்றமாம்!
எதை நிலை நாட்டப் போகிறீர்கள்?
அமைதி என்று சொல்வீர்களென்றால், அது மயானத்தில் நிலவும் பேரமைதியா?

வளர்ச்சி என்றால்…,
அது அம்பானிகளும்,அதானிகளும்,இன்னபிற கார்பரேட்டுகளும் அங்கே இயற்கையை அழித்து உருவாக்கத் துடிக்கும் தொழில்களையா?

அங்கே மண்ணின் மைந்தர்களைத் தவிர்த்து மற்றவர்கள் நிலம்,சொத்து வாங்க முடியாது என்பதால் தானே இது வரை காஷ்மீரின் இயற்கை எழில் காப்பாற்றப்பட்டது!

இந்த சட்டம் ஏதோ மூஸ்லீம் ஆட்சியாளர்களின் சதிச் செயலாகப் பார்க்கப்படுகிறது. ஆனால்,காஷ்மீரை ஆண்ட இந்து ராஜா ஹரிசிங்கால் 1927 ல் கொண்டு வரப்பட்ட சட்டமே அது!

பாஞ்சாபியரும்,குஜராத்திகளும் இன்னபிற இந்திய பெரு முதலாளிகளும் வந்து காஷ்மீரை ஆக்கிரமித்துவிடுவதை தடுக்கவே இந்த சட்டம் என்று ஹரிசிங்கால் கொண்டு வந்த சட்டத்தைத் தான் 1956 ல் நேருவின் அரசும் உறுதிபடுத்தி புதுப்பித்து தந்தது.

நாம் ஏதோ காஷ்மீரிகளுக்கு நிறைய சிறப்பு உரிமைகளையும்,சலுகைகளையும் கொடுத்து வந்தோம் என்று சிலர் பேசுகிறார்கள்!
உண்மையில் இது வரையிலும் இந்திய அரசுகள் காஷ்மீரிகளுக்கு கொடுத்தது என்பது நிம்மதியற்ற வாழ்வு, இராணுவக் குவிப்பு, அளவற்ற உயிரிழப்பு!

அவர்கள் விரும்பியது சுதந்திரமான சுயேட்சையான தனித்துவமான வாழ்க்கை! ஆனால், அதை அவர்களுக்கு இல்லாமலாக்கிவிட்டு, இந்தியாவுடன் இணைத்தோம்! அந்தத் தவறை மறைக்கவும், சர்வதேசரீதியாக நம் பெருந்தன்மையை பறைசாற்றிக் கொள்ளவும்,’’நாங்கள் அவர்களை ஆக்கிரமிக்கவில்லை பெருந்தன்மையாகத் தான் நடத்துகிறோம்..’’ எனக் காட்டவும் சிறப்பு உரிமைகள் தந்ததை பிரகடனப்படுத்தி வந்தோம்.

இப்போது, அப்படிப் பேசிக் கொள்ளும் உரிமைகளைக் கூட இழந்து, சர்வதேச ரீதியில் இந்தியாவின் மீதான துளியளவு நன்மதிப்பையும் துடைத்து போட்டுள்ளோம்…!

அம்பேத்காரே எதிர்த்தாராம்- அதனால் இப்போது அம்பேத்கார் கனவை நிறைவேற்றிவிட்டார்களாம்! – ஏதோ ,அம்பேத்கார் கூறியதையெல்லாம் வேதவாக்காகக் கருதி நிறைவேற்றுபவர்களை போல பேசுகிறீர்களே- இன்னும் தீண்டாமையை உங்கள் நெஞ்சில் சுமந்தபடி!

அம்பேத்கார் என்ன? அந்த ஆண்டவனே சொல்லியிருந்தாலும் அறிவுக் கண் கொண்டும்,இதயசுத்தியுடனும் ஒன்றை அணுகி மதிப்பிடும் எங்கள் மனசாட்சியை மரத்துப் போக அனுமதியோம்!

பாபர்மசூதி இடிக்கப்பட்ட நிகழ்வைவிடவும் பல மடங்கு கொடிய வரலாற்று நிகழ்வை மத்திய பாஜக அரசு சாத்தியபடுத்தியுள்ள இந்த காலகட்டத்தில் தான் நானும் சாட்சியாக வாழ்ந்துள்ளேன் என்று குற்ற உணர்வு என்னை வாழ் நாளெல்லாம் துரத்துமே…!

இந்த இழிவைத் துடைக்கும் மனதிடத்தை இறைவா இந்தியர்களூக்கு அருள்வாய்!

என் அருமை காஷ்மீரிகளே!

இந்த பெருந்துயரத்தில் இருந்து மீண்டு வரும் ஆற்றலையும்,

இன்னும்,அதிக பொறுமையையும்,வரைமுறை கடந்த சகிப்புத் தன்மையையும்

எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு அளிப்பானாக!

News

Read Previous

வானம் பாதுகாக்கப்பட்ட முகடு

Read Next

தமிழ் பெண்கள் சங்கம்

Leave a Reply

Your email address will not be published.