இந்தியன் சோஷியல் ஃபோரம்’, ரியாத்-தமிழ்நாடு மாநிலக்கமிட்டியின் மனிதநேயப்பணிகள்….

Vinkmag ad

இந்தியன் சோஷியல் ஃபோரம்’, ரியாத்-தமிழ்நாடு மாநிலக்கமிட்டியின் மனிதநேயப்பணிகள்….

தமிழகத்திலுள்ள தஞ்சை மாவட்டம் பட்டிஸ்வரம் ஊரை சேர்ந்த முஹம்மது ஷாஜகான் (53) என்பவர் சவூதியிலுள்ள ரியாத்தில் வேலை செய்து வந்த நிலையில் கடந்த 05.05.2019, ஞாயிற்றுக்கிழமை அன்று மரணமடைந்து விட்டார்கள்.

அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் ஜனாஸாவை சவூதி அரேபியாவில் நல்லடக்கம் செய்வதற்கான வழிமுறைகள் தெரியாததால் ரியாத்தில் சமூக சேவைகளை பெருமளவில் செய்துவரும் ‘இந்தியன் சோஷியல் ஃபோரம்’ நிர்வாகிளை தொடர்புக்கொண்டு உதவுமாறு கேட்டுக்கொண்டனர். உடனே செயலில் இறங்கிய ‘இந்தியன் சோஷியல் ஃபோரம்’, ரியாத்-தமிழ்நாடு மாநிலக்கமிட்டியின் சமூக நலப்பணிகளின் பொறுப்பாளர் ராஜ் முஹம்மத் அவர்கள், சட்ட ரீதியிலான விஷயங்களுக்கு தேவையான ஆவணங்களை தயார் செய்வது, இந்திய தூதரக அதிகாரிகளை தொடர்பு கொண்டு உதவிகளை பெறுவது என துரிதமாக செயல்பட்டார். எல்லாம் வல்ல இறைவனின் உதவியைக்கொண்டு அனைத்துச் சட்டப்பணிகளும் முடிந்து அன்னாரது ஜனாஸாவை சவூதிஅரேபியாவில் நல்லடக்கம் செய்வதற்கான ஆவணங்களை அவரது உறவினர் அஸ்வத் கான் பெயரில் பெறப்பட்டு. கடந்த 07.05.2019 செவ்வாய்க்கிழமை ரியாத்திலுள்ள அல்-ராஜி பள்ளியில் (Exit :15) அஸர் தொழுகைக்குப்பிறகு ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டு நஸீம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இறைவனின் கிருபையால் இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் மகத்தான பணிகள் எப்போதும் போல் தொடர்கின்றது…

இவண்,

#இந்தியன்சோஷியல்ஃபோரம்

 

News

Read Previous

நோன்பு கஞ்சி உருவான தகவல்

Read Next

உலக செவிலியர் தினம்

Leave a Reply

Your email address will not be published.