நோன்பு கஞ்சி உருவான தகவல்

Vinkmag ad

நோன்பு கஞ்சி உருவான தகவல்
( நோன்பு கஞ்ஜிக்கு உரிமையாளர்,
கூத்தாநல்லூர் ,முகம்மது அலிக்கு,
துவா செய்வோம்,
அல்ஹம்துலில்லாஹ் ,பிஸ்க் நஜீம்,நீடூர்)
( நீடூருக்கு முதன் முதலில் கஞ்ஜி காய்ச்ச செம்பு சட்டி வாங்கி கொடுத்தது யார் ? )

பல ஆயிரம் வருடங்களாக இஸ்லாமியர்கள் ரமலான் மாதம் 30 நாட்கள் உண்னா நோன்பு இருந்து வருவது நாம் அனைவரும் அறிந்த ஒன்று.

நோன்பு மாதம் என்றவுடன் கட்டாயம் நோன்பு கஞ்சி அனைவரையும் நினைவுப்படுத்தும். இன்று உலகெங்கிலும் நோன்பு கஞ்சியை பற்றி தெரிந்திருந்தாலும், அதை முதலில் காய்ச்சியது என்ற கடையநல்லூரை சேர்ந்த முஹம்மது அலி என்ற தமிழர்..

இன்று மியான்மர் என அழைக்கப்படும் பர்மாவில் அன்று உணவகம் வைத்திருந்தவர் முஹம்மது அலி. அன்றைய மியான்மரில் உண்ணா நோன்பு பூர்த்தி செய்யும் நேரத்தில் அரிசியால் ஆன கஞ்சியையும், வெங்காயத்தையும் கடித்து முடித்துக் கொண்டனர்.

இந்த பழக்கம் பரவலாக பர்மாவின் பல பகுதிகளிலும் காணப்பட்டது. ஆனால், குளிர்ந்த நிலையில் மிக கடினமான அரிசியால் இருப்பதை கண்ட முஹம்மது அலி அவர்கள்.

நோன்பை முடித்து கொள்ளும் நேரம் கடினமான உணவை விட, இலகுவான உணவாக இருந்தால் வயிற்று செரிமானத்திற்கு உகந்ததாக இருக்குமென எண்ணினார்.

பின் அது போன்ற கஞ்சியை கொதிக்க வைத்து அரிசியை மிகவும் குலையும் நிலைக்கு சமைத்து உண்ணாமல், நீராகாரம் போல் அருந்தும் வண்ணம் சமைத்தார். மேலும், சுவை சேர்க்க செரிமான பொருட்களையும் சேர்த்து சுவை பார்த்தார்.

ஆச்சரியமான ஒரு சுவையான உணவு கிடைத்தது. அருகில் உள்ள வீட்டினர் அனைவருக்கும் செய்து கொடுத்தார். பருகிய அனைவரும் விரைவாக செரிமானம் ஆவதாக கூறி பாராட்டினார்கள்.

நோன்பு காலங்களில் கஞ்சியை காய்ச்சி தன் உணவகத்திலே விற்பனைக்காக வைத்தார். ஆரம்பத்தில் சிலரால் கவரப்பட்டது. நாளடைவில் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இதை நாம் நம் தமிழ் மண்ணிற்கு அறிமுகப் படுத்த வேண்டும் என்று எண்ணி கடையநல்லூருக்கே வந்தடைந்தார். தனது செலவிலே கஞ்சியை காய்ச்சி பள்ளிவாசலுக்கு வரும் நோன்பாளிகளுக்கு கொடுத்தார். கடைய நல்லூரை சுற்றிய பகுதிகளிலும் நோன்பாளிகளின் பசியை தீர்க்கும் அற்புத உணவாக அறியப்பட்டு, தமிழ் இஸ்லாமியர்களால் தமிழகமெங்கும் வலம் வந்தது.

இஸ்லாமியர் நோன்பு திறக்க மட்டும் கொடுக்கப்பட்ட இந்த கஞ்சி, அதன் பின் படிப்படியாக உதவும் குணம் கொண்டவர்களால் பள்ளிவாசல் நாடி வரும் அனைத்து மத மக்களுக்கும் கொடுக்கப்பட்டது. தற்பொழுதும் கொடுக்கப்பட்டுவருகிறது..

சில காலங்களிலே கேரளாவிலும் நோன்பு கஞ்சி பிரபலமானது. கேரளாவினர் மூலம் அரேபிய தேசம் சென்றது, படிப்படியாக ஆசியாவையே கொள்ளை கொண்ட அற்புத உணவு, இன்று உலகையே தன் சுவைக்குள் கொண்டு வந்துள்ளது..

முதல் நோன்புக்கஞ்சியை முஹம்மது அலி அவர்கள் காய்ச்சிய வருடம் 1948.
அரை நூற்றாண்டு காலம் மட்டுமே அறியப்பட்ட நோன்புக்கஞ்சி, பல்லாயிரம் வருடத்திற்கு முன்பான நோன்பு விரதத்தில் இணைந்து, இன்று பிரிக்க முடியாத ஒர் அங்கமாகி விட்டது..

நோன்பு கஞ்சி முற்றிலும் மருத்துவக் குணம் கொண்ட உணவாகும். இன்று பல நாடுகளில், பல பெயர்களால் அழைக்கப்படும் இந்த நோன்பு கஞ்சிக்கு முதல் சுவையை அறிமுகப்படுத்திக் காட்டியது தமிழர் என்பதில் பெருமிதம் கொள்வோம்..

News

Read Previous

பொன் விழா காணும் லேசர்

Read Next

இந்தியன் சோஷியல் ஃபோரம்’, ரியாத்-தமிழ்நாடு மாநிலக்கமிட்டியின் மனிதநேயப்பணிகள்….

Leave a Reply

Your email address will not be published.