உலக செவிலியர் தினம்

Vinkmag ad
உலக செவிலியர் தினம் .

நோயில் விழுந்த மனிதர்களை,

சேயெனக் கருதி சிறப்பாக,
தாய்போல் காக்கும் செவிலியர்கள் ,

கோயில் இல்லா தெய்வங்கள்.

மருத்துவம் காக்கும் ஓரளவே,
மகத்துவம் வாய்ந்த செவிலியரின்,
தனித்துவம்  வாய்ந்த சேவையினால்,
மனத்துயர் மறந்தே குணமடைவார்.
தொழுநோயாளிகள் என்றாலும் ,
புழுவாய்த்துடிப்போர் ஆனாலும் ,
கழுவி அவர்க்கு மருந்திட்டு ,
தொழிலாய் அதனை நினையாமல்,
தொண்டாய் அதனைத்தான் நினைத்தே
முழு மனதோடு சேவை செய்யும் ,
வழுவாநெறியுடை செவிலியரை,
தொழுவோம் மாந்தரில் தெய்வமென.
மனிதநேயம் மிகுந்தவராய்
புனிதமான சேவை செய்யும்,
மனித தெய்வம் செவிலியரை,
புனிதர் என்றே போற்றிடுவோம்.
சிலேடை சித்தர் சேது சுப்பிரமணியம்.
12.05.2019.

News

Read Previous

இந்தியன் சோஷியல் ஃபோரம்’, ரியாத்-தமிழ்நாடு மாநிலக்கமிட்டியின் மனிதநேயப்பணிகள்….

Read Next

நல்ல நண்பர்கள் தேவை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *