கவிதைகள் (All)

தேசிய மகளிர் தினம்

தேசிய மகளிர் தினம் (சரோஜினி நாயுடு பிறந்த நாள்)

கணிதத்தோடு தோழியாக கைகோர்க்க விரும்பாமல்கவிதையோடு காதல் கொண்ட மாயப்பெண்ணாக இருந்தவரே…
பதின்மூன்று வயதில் பதின்மூன்று நூறு வரிகளைக் கொண்டு
கவிதை எழுதிய பாரதிய கோகிலாவே..

சாதி என்னும் பெரும் தொற்றுக்கு
சமத்துவ சங்கு ஊதியவரே..
எதுவும் செய்யாமல் இருக்க பெண்கள் ஒன்றும்
பிணம் இல்லை…
சரியானதைச் செய்ய எந்த தடையும் இல்லை…
என்று முழங்கிய கவிக்குயிலே…
தேசப் பிதாவின் மிக்கி மவுசே…

அளவில்லா மகிழ்ச்சியிலோ
ஆழ்ந்த துக்கத்திலோ தான் கவிதை வரும் என்ற
தங்களின் கூற்றின்படி
மகிழ்ச்சியான இந்நாளில்

தங்களுக்காக ஓர் கவிதை சமர்ப்பணம்…

Lt. ஜ. ஹாஜிராம் பீவி,
உதவி பேராசிரியை மற்றும் தேசிய மாணவர் படை அலுவலர்,
கணினி அறிவியல் துறை,
ஜமால் முகமது கல்லூரி,
திருச்சி –  620 020

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button