இராமநாதபுரம்

இராமநாதபுரம் – இராமேஸ்வரம் மின் ரயில்பாதை பணி தீவிரம்.

இராமநாதபுரம் – இராமேஸ்வரம் மின் ரயில்பாதை பணி தீவிரம்.

ராமநாதபுரம் – ராமேஸ்வரம் இடையே மின் ரயில் பாதை பணிகள் முழுவீச்சில் நடக்கிறது.

பாம்பன் கடலில் அமைத்த புதிய ரயில் பாலத்தை ஏப்., 6ல் பிரதமர் மோடி திறந்து வைத்து ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்தை துவக்கினார். இந்த வழித்தடத்தில் ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரத்திற்கு மின் ரயில் பாதை இல்லை. இதனால் டீசல் இன்ஜின் ரயில்கள் தான் சென்று வருகின்றன.

இதற்கு காரணம், உச்சிப்புளி அருகே உள்ள ஐ.என்.எஸ்., பருந்து இந்திய விமானப்படை நிலையம் அருகில் 220 மீ., தண்டவாளம் செல்கிறது. அங்கு 25,000 வோல்ட் மின் கம்பிகள் சென்றால் தங்களின் தகவல் தொடர்பு சாதனங்களுக்கு சிக்கல் ஏற்படும் என கடற்படை எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் பணிகள் தாமதமாகின.

இந்நிலையில் பருந்து விமான தளத்தின் சுற்றுச்சுவர் உள்ள 220 மீ.,ல் பூமிக்கு அடியில் மின் கேபிள்கள் அமை பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. கால்நடைகள், மனிதர்கள்
ஊடுருவலை தடுக்க தண்டவாளம் இருபுறமும் 400 மீ.,க்கு தடுப்பு வேலிகள், சிசிடிவி., கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. இப்பணிகள் இரு மாதத்தில் முடியும். இதன்பின் ராமேஸ்வரத்திற்கு மின் இன்ஜின் ரயில் இயக்கப்படும் என ரயில்வே ஊழியர்கள் தெரிவித்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button