இராமநாதபுரம்
மூத்தோர் தடகள போட்டி

இராமநாதபுரம் மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் நடத்திய 2025ம் ஆண்டிற்கான மூத்தோர் தடகள போட்டி மாவட்ட தலைவர் ஹனிபா தலைமையில் நடைபெற்றது. இதில் பரமக்குடி முகமது கனி என்பவர் 55 வயது முதல் 60 வயதிற்குட்பட்ட குண்டு எறிதல், சங்கிலி குண்டு எறிதல், ஈட்டி எறிதல் ஆகிய மூன்று போட்டிகளிலும் முதல் இடம் பிடித்து சாதனை படைத்தார்.

மேலும் வருகின்ற 22, 23ம் தேதி காரைக்குடியில் மாநில அளவில் நடைபெற உள்ள போட்டிக்கு தேர்வாகி உள்ளார். மினு ஸ்போர்ட்ஸ் அகாடமி நிறுவனர் சரவண சுதர்சன், வழக்கறிஞர் பசுமலை ஆகியோர் உடனிருந்தனர்.




