இராமநாதபுரம்
கோவில் திருவிழா

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே லட்சுமணன் குடியிருப்பு கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பூமாரி அம்மன் கோவில் பதினாறாம் ஆண்டு அக்னிசட்டி, பால்குடம், பொங்கல் விழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது. முன்னதாக அம்மனுக்கு காப்பு கட்டப்பட்டு தீபாரதணை காண்பிக்கப்பட்டு விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் பூசாரியிடம் காப்பு கட்டுதல் நடைபெற்றது. தொடர்ந்து 08ம் தேதி அக்னிசட்டி, பூத்தட்டுவிழா, 09ம் தேதி பால்குடம் கரகம், வேல்பூட்டுதல் விழா நடைபெற உள்ளது தொடர்ந்து இரவு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.





