போட்டித்தேர்வுகளை எளிதில் எதிர்கொள்வது குறித்த கருத்தரங்கம்

போட்டித்தேர்வுகளை எளிதில் எதிர்கொள்வது குறித்த கருத்தரங்கம்

முதுகலை வணிகவியல்துறை மற்றும் கல்லூரி உள் தர உறுதி செல் இணைந்து 26.07.2025 அன்று போட்டித்தேர்வுகளை எளிதில் எதிர்கொள்ளும் முறைகள் குறித்த ஒருநாள் கருத்தரங்கு நடைபெற்றது. துறைத்தலைவர் நாசர் வரவேற்றார். கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் தலைமையுரையாற்றினார். உதவிப்பேராசிரியர் சம்சுதீன் இப்ராஹிம் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினராக இராமநாதபுரம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி, சிவகுமார் கலந்துகொண்டு போட்டித்தேர்வுகளின் வகைகள் மற்றும் போட்டித்தேர்வுகளில் எளிதில் வெற்றி பெற மேற்கொள்ளவேண்டிய வழிமுறைகள் குறித்தும் பேசினார். நிகழ்வில் வணிகவியல் துறை மற்றும் அனைத்து அறிவியல் துறை மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். உதவிபேராசிரியை முஹம்மது பாத்திமா நன்றி கூறினார்.




